தமிழ் செய்திகள்  /  Sports  /  Asia Cup 2022: Pakistan Reaches Asia Cup Final After Shah's Last-over Sixes

Asia cup 2022: கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான்! ஒரு விக்கெட்டில் பாக். வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 08, 2022 02:47 PM IST

மிகவும் குறைவான டார்கெட்டை செட் செய்தாலும், பெளலிங்கில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு மரண பயணத்தை காட்டிய ஆப்கானிஸ்தான் அணியினர் கடைசி வரை போரட்ட குணத்தை வெளிப்படுதினர். இருப்பினும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலில் நுழைந்தது பாகிஸ்தான் அணி.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாட்டம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாட்டம் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டி தகுதி பெறுவதற்கான முதல் கட்ட வாய்ப்பு இருந்த நிலையில். இந்திய ரசிகர்களும் ஆர்வமாக போட்டியின் முடிவை எதிர்நோக்கி இருந்தனர்.

ஆனால் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் 2 வெற்றிகளுடன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை 2022 தொடர் இறுதிப்போட்டி இலங்கை - பாகிஸ்தான் இடையே நடைபெற இருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இனி நடைபெற இருக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான், இலங்கை - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 சுற்று போட்டிகள் சம்பிரதாய ஆட்டமாகவே மாறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான போட்டி பல்வேறு திருப்பங்கள் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. துபாய் மைதானம் போல் ஷார்ஜா மைதானமும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருந்தாலும், மற்றொரு முக்கிய விஷயமாக அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மந்தமான பிட்ச் ரன்குவிப்பை கட்டுப்படுத்துகிறது.

இதனால் குறைவான ஸ்கோரை முதலில் பேட்டிங் செய்த அணி எடுத்தாலும், சரியான முறையில் நெருக்கடி அளிக்கும் விதமாக பெளலிங் செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த வகையில் டாஸிஸ் தோற்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மிகவும் எளிதான இந்த டார்கெட்டை துல்லியமான பெளலிங் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் தடுத்தனர் ஆப்கானிஸ்தான் பெளலர்கள். பார்மில் இருக்கும் முகமது ரிஸ்வான் அதிரடியாக பேட் செய்ய விடாமல் கட்டுப்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்து வெளியேற்றினர்.

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறினார். நடுவரிசை பேட்ஸ்மேன்களான இஃப்திகர் அகமத் - ஷதாப் கான் ஆகியோர் நல்ல பார்னர்ஷிப் அமைத்து அணியை ஸ்கோரை மெல்ல உயர்த்திக்கொண்டிருந்தபோது இவர்களை பிரித்தனர் ஆப்கானிஸ்தான் பெளலர்கள் ஃபரீக் அஹமத், ரஷித்கான்.

100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்தார்கள் ஆப்கானிஸ்தான் பெளலர்கள் ஃபரூக்கி. ஃபரீத் அஹமத். இவர்களு இருவரும் இணைந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, 118 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

ஒரு விக்கெட் வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது, பத்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நாசிம் ஷா இரண்டு சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை பினிஷ் செய்தார்.

கடைசி வரை பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றில் இரண்டு வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பந்து வீச்சில் ஒரு விக்கெட், பேட்டிங்கில் 36 ரன்கள் எடுத்த ஷதாப் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். லீக் சுற்றில் 2 வெற்றிகளுடன் சிறப்பாக தொடரை ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். வெறும் சம்பிரதாய ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

WhatsApp channel