தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: ஹாங்காங் அணிக்கு எதிராக கோலி அரைசதம்! சூப்பர் 4 சுற்றில் இந்தியா

Asia cup 2022: ஹாங்காங் அணிக்கு எதிராக கோலி அரைசதம்! சூப்பர் 4 சுற்றில் இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 01, 2022 12:41 AM IST

விராட் கோலி, கேஎல் ராகுல் தங்களது பார்மை நிருபிக்கவும், அதை மீட்டெடுக்கும் விதமாகவும் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி அமைந்திருந்தது. அதை இருவரும் சரியாகவே பயன்படுத்திக்கொண்டனர்.

ஹாங்காங் அணிக்கு எதிராக சிறப்பாக பேட் செய்து அரை சதம் விளாசிய விராட் கோலி
ஹாங்காங் அணிக்கு எதிராக சிறப்பாக பேட் செய்து அரை சதம் விளாசிய விராட் கோலி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆசிய கோப்பை தொடரின் நான்காவது ஆட்டம், இந்தியாவுக்கான இரண்டாவது ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இந்தியா - ஹாங்காங் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று சேஸிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் பாகிஸ்தான் அணி்ககு எதிரான மேட்ச் வின்னர் ஹர்திக் பாண்ட்யா வுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

ரோஹித் ஷர்மா வழக்கம்போல் பவுண்டரி, சிக்ஸருக்கு ஆசைப்பட்டை 21 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். காயத்துக்கு பிறகு திரும்பிய கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடுவதில் கவனம் செலுத்தினார். ஒரு நாள் இன்னிங்ஸ் போல் விளையாடி அவர் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த ஸ்கை என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டைலில் எதிர்பாராத இடங்களில் எல்லாம் பந்தை பவுண்டரிகளாக விரட்டினார். பார்மை மீட்டெடுக்கும் ஒரே குறிக்கெோளுடன் நிதானமாக ஆடி வந்த கோலி அரைசத்தை பூர்த்தி செய்தார். ஹாங்காங் பெளலர்களும் இந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தாவிட்டாலும் ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் நன்றாகவே கட்டுப்படுத்தினர்.

ஆனால் கடைசி ஓவரில் சூர்ய குமார் யாதவ் பந்தை நாலபுறமும் பறக்க விட 26 ரன்கள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா அணி 192 ரன்களை குவித்தது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த கடினமான சேஸை விரட்ட களமிறங்கிய ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் அப்படியே இந்திய பெளலிங்குக்கு சரண்டர் ஆகாமல், தங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்ப ரன்குவிப்பில் ஈடுபட்டபோதிலும் கடைசி நேரத்தில் இந்திய பெளலர்கள் சுதாரித்து ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. தொடர்ச்சிய இரண்டு வெற்றிகளை பெற்ற இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்தபடியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய இளம் பந்து வீச்சாளர்களான ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் ஓவர்களை ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் நன்கு பயன்படுத்தி ரன்களை அள்ளி குவித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 8 ஓவர்களுக்கு 97 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். அதே போல் அனுபவ பெளலர்களான புவனேஷ் குமார், ஜடேஜா, சஹால் ஆகியோர் 11 ஓவர்கள் வீசி 48 ரன்களை மட்டும் கொடுத்திருந்தனர்.

பந்தை நாலாபுறமும் பறக்க விட்ட அரைசதம் அடித்து, அணியின் ஸ்கோரையும் உயர்த்திய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

WhatsApp channel