Asia cup 2022: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் டான்-ஆக வலம் வரும் இந்திய அணி!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் டான்-ஆக வலம் வரும் இந்திய அணி!

Asia cup 2022: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் டான்-ஆக வலம் வரும் இந்திய அணி!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 26, 2022 12:51 PM IST

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விளையாடப்பட்டு வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 தொடர்களில் 10 தொடர்களில் இறுதிக்கு நுழைந்து, பாதிக்கு பாதி என 7 தொடர்களை வென்று டான் அணியாகவே வலம் வருகிறது.

<p>ஏழு முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா அணி</p>
<p>ஏழு முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா அணி</p>

ஆசிய கோப்பையில் வெற்றிகரமான இந்திய அணி

1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் 38 ஆண்டுகளில் 14 முறை விளையாடப்பட்டுள்ளது. இதில் 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இலங்கை அணி 5 கோப்பைகளுடனும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணி 2 கோப்பைகளையும் வென்றுள்ளது.

இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற மூன்று முறையும் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. இந்தியாவுக்காக ஆசிய கோப்பையை சுனில் கவாஸ்கர் (1986), திலீப் வெங்சர்க்கார் (1988), முகமது அசருதீன் (1990, 1995), பின் 15 ஆண்டுகள் கழித்து எம்எஸ் தோனி (2010, 2016), ரோஹித் ஷர்மா (2018) ஆகிய கேப்டன்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

டி20 தொடராக ஆசிய கோப்பை

2016ஆம் ஆண்டு முதல் சர்வதேச அட்டவணைக்கு ஏற்ப ஆசிய கோப்பை தொடரை ஒரு நாள் மற்றும் டி20 தொடராக சுழற்சி முறையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இந்தியா வென்றது.

இதைத்தொடர்ந்து தற்போது 2022ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் டி20 தொடராக நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை விளையாடிய அணிகளின் வெற்றி தோல்வி விகிதம்

அணிகள்மொத்த போட்டிகள்வெற்றிதோல்விசராசரிசிறந்த இடம்
இந்தியா54361668.867 முறை சாம்பியன்
இலங்கை54351964.814 முறை சாம்பியன்
பாகிஸ்தான்49282058.332 முறை சாம்பியன்
வங்கதேசம்48103820.832012,02016, 2018 ஆண்டுகளில் 
இறுதிப்போட்டி
ஆப்கானிஸ்தான்125645.83தகுதி சுற்று

1986 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகளாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இருந்து வந்தன. இதைத்தொடர்ந்து 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் ஹாங்காங் அணியும், 2014இல் ஆப்கானிஸ்தான் அணியும் இணைந்தன.

பின்னர் 2018ஆம் ஆண்டு தொடரில் மீண்டும் தகுதி பெற்ற ஹாங்காங், தற்போது 2022ஆம் தொடரிலும் விளையாடுகிறது.

இடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. 

Whats_app_banner
மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.