Asia cup 2022: பாக். அணிக்கு எதிராக சாதனை புரிந்த இந்திய வேகபந்து வீச்சாளர்கள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: பாக். அணிக்கு எதிராக சாதனை புரிந்த இந்திய வேகபந்து வீச்சாளர்கள்

Asia cup 2022: பாக். அணிக்கு எதிராக சாதனை புரிந்த இந்திய வேகபந்து வீச்சாளர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2022 07:17 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர், அத்துடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

<p>பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்</p>
<p>பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்</p> (PTI)

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு காலி செய்தனர் இந்திய பெளலர்கள். இதில் சிறப்பு அம்சமாக பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட்டில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இந்திய ஸ்பின்னர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதுபோன்ற நிகழ்வை இந்திய முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் நிகழ்த்தியது.

இதைத்தொடர்ந்து தற்போது துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜ்ஜியம் நிகழ்த்தியுள்ளனர். இதுவும் முதல் முறையாக இந்தியா சார்பில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இந்த 12 ரன்கள் எடுத்துள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் கப்திலை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.

இதுவரை 133 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 3,497 ரன்களுடன் கப்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 3,343 ரன்களுடன் உள்ளார்.

 

Whats_app_banner
மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.