Ravichandran Ashwin: 10+ விக்கெட்டுகள்! இந்திய ஸ்பின் ஜாம்பவான் கும்ப்ளே சாதனையை சமன் செய்த அஸ்வின்
என்னைய மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சேர்ந்திருந்தால் என்ற கேள்விக்கு பதிலு கூறும் விதமாக சூழலில் ஜாலம் நிகழ்த்தி காட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அந்நிய மண்ணில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்திருக்கும் அவர், அந்நிய மண் நாயகனாக இருந்து வந்த கும்பளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்தபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இந்த அணி நிர்வாகத்தின் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான சுழற்சியில் இந்தியா தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டோமினிகாவில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டி மூன்று நாளில் முடிவுற்ற நிலையில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் தனது மாயஜால சுழற்பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மிரட்டிய அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என மொத்த 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அந்நிய மண்ணில் தனது சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார். இதையடுத்து விக்கெட் மழையால் பல்வேறு சாதனைகளும் புரிந்துள்ளார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியபோது, 33 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஆண்டர்சனை முந்தினார். இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து, இலங்கையின் ரங்கனா ஹெராத் சாதனையை சமன் செய்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அனில் கும்ப்ளே, 35 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் லிஸ்டில் நான்காவது வீரராக உள்ளார். தற்போது இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அதை சமன் செய்யவோ அல்லது முறியடிக்கவோ செய்யலாம்.
அஸ்வின் 6வது முறையாக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இதை நிகழ்த்திய ஒரே இந்திய பவுலர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தின் சிட்னி பார்ன்ஸ் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் இலங்கையின் முத்தையா முரளிதரன் 11 முறையும், இலங்கையை சேர்ந்த மற்றொரு பவுலரான ரங்கனா ஹெராத் 8 முறையும் எடுத்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளார்கள்.
வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் எட்டாவது முறையாக 10+ விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் அஸ்வின். இதன் மூலம் கும்பளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த லிஸ்டில் 5வது இடத்திலும் உள்ளார்.
இந்த போட்டியில் 131 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஸ்வின். இதன் மூலம் அந்திய மண்ணில் சிறந்த பந்து வீச்சு, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய பவுலரின் சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் அஸ்வின் பவுலிங், என்னை மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சேர்த்திருந்தால் என்ற கேள்விக்கு பதில் கூறும் விதமாக சுழலில் மாயஜாலம் நிகழ்த்தியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்