Ashes 2023: உலக கிரிக்கெட்டின் மிகப் பெரிய மோதல் - ஆஷஸ் தொடரின் வரலாறும், பின்னணியும்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023: உலக கிரிக்கெட்டின் மிகப் பெரிய மோதல் - ஆஷஸ் தொடரின் வரலாறும், பின்னணியும்

Ashes 2023: உலக கிரிக்கெட்டின் மிகப் பெரிய மோதல் - ஆஷஸ் தொடரின் வரலாறும், பின்னணியும்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 16, 2023 02:14 PM IST

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கும் மோதலாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. இந்த தொடருக்கான பின்னணியில் இருக்கும் நீண்ட நெடிய வரலாற்றை பற்றி பார்க்கலாம்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது

கடந்த முறை 2021-22ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 4-0 என கணக்கில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக உள்ளது. இதையடுத்து 2023 தொடர் இங்கிலாந்தில் நடைபெறும் நிலையில் முதல் போட்டி பிரிமிங்காம் மைதானத்தில் தொடங்குகிறது. ஆஷஸ் கிரிக்கெட் தொடருடன் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டிகளும் தொடங்குகின்றன.

ஆஷஸ் கிரிக்கெட் வரலாறு

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 140 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது 1877ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே மெல்போர்னில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 1882இல் தான் முதல் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவில் தான் தொடங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது.

இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா அணி 1882இல் முதல் முறையாக வெற்றி பெற்றது. இந்த நிகழ்வே ஆஷஸ் தொடர் தொடங்குதற்கு காரணமாக அமைந்தது. ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து தோல்வியடைந்த நிலையில், அப்போது இங்கிலாந்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரான ரெஜினால்ட் ஷெர்லி ப்ரூக்ஸ், " 29 ஆகஸ்ட், 1882இல் ஓவல் மைதானத்தில் வைத்து இங்கிலிஷ் கிரிக்கெட் மறைந்துவிட்டது, அதன் உடல் தகனம் செய்யப்பட்டு அந்த சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று அணியின் தோல்வி குறித்து இரங்கல் செய்தியாக நாளிதழில் வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் முறையாக தோல்வியடைந்த பின்னர் வெளியான இரங்கல் செய்தி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் முறையாக தோல்வியடைந்த பின்னர் வெளியான இரங்கல் செய்தி

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்து அஸ்தியை மீண்டும் தாயகம் கொண்டு வருவேன் என்று சபதம் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஐவோ ப்ளிக் சபதம் எடுத்தார். அதை நிறைவேற்றும் விதமாக அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 2-1 என வெற்றி பெற்று சொன்ன வாக்கை காப்பாற்றினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்தின் அஸ்தி எடுத்து செல்லபட்டதன் நினைவாக டெரக்கோட்டாவால் ஆன சிறிய கலசம் வெற்றிக்கோப்பையாக இங்கிலாந்து கேப்டன் ஐவோ ப்ளிக்குக்கு தரப்பட்டது. சுமார் 10 செமீ உயரம் கொண்ட அந்த கலசம் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்ற ஸ்டம்ப்களில் இருந்த பைல்களை எரித்த சாம்பல்களால் உருவாக்கப்பட்டது என கூறப்பட்டது. அத்துடன் ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்ட பந்தை எரித்து அதன் சாம்பலில் உருவாக்கியது என்ற பேச்சும் உள்ளது.

1927ஆம் ஆண்டில் ஐவோ ப்ளிக் இறந்த பின்னர் அவரது மனைவி முதல் முறையாக பெற்ற ஆஷஸ் கோப்பையை மெர்லிபோன் கிரிக்கெட் கிளப்பிடம் வழங்கினார். தற்போது அந்த கோப்பை லார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோப்பையின் பிரதியானது ஒவ்வொரு முறை வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படுகிறது. 1998-99 ஆஷஸ் தொடரிலிருந்து இந்த கலசம் போன்ற கோப்பை வாட்டர்ஃபோர்ட் கிரிஸ்டல் கோப்பை MCC ஆல் நியமிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.