Ashes 2023: டி20க்கு நிகரான த்ரில்! பவுண்டரியில் தொடங்கி பவுண்டரியில் முடிந்த போட்டி - வெற்றியுடன் ஆஸி., முன்னிலை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023: டி20க்கு நிகரான த்ரில்! பவுண்டரியில் தொடங்கி பவுண்டரியில் முடிந்த போட்டி - வெற்றியுடன் ஆஸி., முன்னிலை

Ashes 2023: டி20க்கு நிகரான த்ரில்! பவுண்டரியில் தொடங்கி பவுண்டரியில் முடிந்த போட்டி - வெற்றியுடன் ஆஸி., முன்னிலை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 21, 2023 12:34 AM IST

டி20 போட்டியை விட பல மடங்கு பரபரப்பு குறையாமல் நடைபெற்று முடிந்திருக்கும் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் உண்மையான முகத்தை காட்டிய போட்டியாக இது அமைந்துள்ளது.

பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்த மகிழ்ச்சியை கொண்டாடும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்த மகிழ்ச்சியை கொண்டாடும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல் அதிரடி பாணியை கைவிட்டு கிளாசிக் டெஸ்ட் இன்னிங்ஸை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பின்னர் சுதாரித்து விளையாடியது. இருப்பினும் கடைசி நேரத்தில் 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் ஆஸ்திரேலியா அணியில் கவாஜா 141 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா பவுலர்களில் முதல் இன்னிங்ஸில் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து பவுலர்களில் பிராட், ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 273 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா பவுலர்களில் கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடைசி நாள் ஆட்டமான இன்று முதல் செஷன் முழுவதும் மழையால் தடைபட்டது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியாவுக்கு வெற்றிக்கு தேவையாக 175 ரன்கள் இருந்தன. அதேபோல் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமானால் 7 விக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக 282 ரன்கள் நிர்ணயித்திருந்து. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த ஆஸ்திரேலியா 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களத்தில் உஸ்மான் கவாஜா 34, நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய போலாந்து 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்றைய நாள் ஆட்டம் நேரடியாக உணவு இடைவேளைக்கு பின்னர் நேரடியாக இரண்டாவது செஷனில் தொடங்கியது. கவாஜாவுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த போலாந்து 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த ஹெட் 16 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் பேட் செய்ய வந்த க்ரீன் 28, அலெக் கேரி 20 ரன்கள் என தங்களால் முடிந்த பங்களிப்பை வெளிப்படுத்தி சென்றனர்.

இவர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கவாஜா அரைசதத்தை பூர்த்தி செய்தார். 65 ரன்கள் எடுத்து அவர் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டு ஆனார்.

ஆஸ்திரேலியா அணி 227 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த நிலையில், வெற்றிக்கு 55 ரன்கள் தேவை என்று இருந்தபோது களத்தில் அணியின் கேப்டன் கம்மின்ஸ், லயன் இருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நிதானத்தை கடைப்பிடித்து விளையாடினர். ரன்களும் மெதுவாக வெற்றி இலக்கை நோக்கி சென்றது.

இரண்டு செஷன்கள் மட்டுமே விளையாடும் சூழ்நிலை இருந்ததால் 60 ஓவர்கள் மட்டும் பவுலிங் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்ட்டது. அதற்கு ஏற்றார் போல் இன்றைய நாள் முடிவதற்கு 3 ஓவர்கள் தான் எஞ்சியிருந்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவர் என கருதப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மெய்டன் ஆக்கினார் இங்கிலாந்து பவுலர் ராபின்சன்.

போட்டி தொடங்க தாமதமானதால் கூடுதல் ஓவர்கள் வீசும் சூழ்நிலை உருவானது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலியா 92.3 ஓவரில் பவுண்டரியுடன் ஆட்டத்தை பினிஷ் செய்தது. ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றிக்கான ஷாட்டை ஆடினார்.

2005இல் இதே மைதானத்தில் முதல் டெஸ்டில் இதே 282 ரன்களை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் இந்த மைதானத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. டி20 போட்டிக்கு நிகராக இந்த போட்டி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது.

கம்மின்ல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44, லயன் 16 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டியின் முதல் பந்தில் பவுண்டரியுடன் தொடங்கினார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் க்ராவ்லி. தற்போது ஆட்டத்தை பவுண்டரியுடன் பினிஷ் செய்துள்ளார் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.