Ashes 2023: ஸ்டோக்ஸை நிலைகுலைய வைத்த ஸ்டார்க்! இங்கிலாந்து விறுவிறு ஆட்டம் - ஆஸ்திரேலியா நிதானம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023: ஸ்டோக்ஸை நிலைகுலைய வைத்த ஸ்டார்க்! இங்கிலாந்து விறுவிறு ஆட்டம் - ஆஸ்திரேலியா நிதானம்

Ashes 2023: ஸ்டோக்ஸை நிலைகுலைய வைத்த ஸ்டார்க்! இங்கிலாந்து விறுவிறு ஆட்டம் - ஆஸ்திரேலியா நிதானம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 28, 2023 07:40 AM IST

மற்றொரு மிரட்டலான பவுலிங், பந்து வீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட் என ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி ஆல்அவுட்டாகியுள்ளது.

ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டு ஆன பென் ஸ்டோக்ஸ்
ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டு ஆன பென் ஸ்டோக்ஸ்

ஆட்டத்தின் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிய அளிவில் செட்டில் ஆகவிடாமல் ஆஸ்திரேலியா பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்களை குவித்த போதிலும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இங்கிலாந்து அணி மீண்டும் அட்டாக் பேட்டிங் பாணியை இந்த போட்டியிலும் கடைப்பிடித்தது. ஒரு நாள் போட்டி போல் விரைவாக ரன் குவிப்பதில் குறியாக இருந்தனர். மிடில் ஆர்டரில் பேட் செய்த ஹாரி ப்ரூக் மட்டும் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 54.4 ஓவரில் 283 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்டார்க் 4, ஹசில்வுட் 2, கம்மின்ஸ், மார்ஷ், டோட் முர்பு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 26, லபுஸ்சேன் 2 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்கள். வார்னர் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகியுள்ளார். இங்கிலாந்து போல் இல்லாமல் ஆஸ்திரேலியா நிதான ஆட்டத்தை கடைப்பிடித்து வருகிறது.

இந்த போட்டியில் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை கிளீன் போல்டாக்கினார் ஆஸ்திரேலியா வேகம் மிட்செல் ஸ்டார்க். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதேபோல் தான் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சில் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திருப்பார் ஸ்டார்க்.

 

தற்போது அதை அப்படியே ரிப்பீட் செய்தது போல் இந்த விக்கெட் அமைந்திருந்தது. ஸ்டோக்ஸை நிலைகுலைய செய்த ஸ்டார்க் பந்து வீச்சின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.