Ashes 2023: இதுதான் கம்பேக்! டிரா ஆன ஆஷஷ் தொடர் - இங்கிலாந்தின் புதுவிதமான அட்டாக் கிரிக்கெட்
இந்த தொடர் முழுவதுமே தனது வழக்கமான பாணியினால Ddefensive mode கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக மாறி பேட்டிங்கில் அதிரடி காட்டி அட்டாக்கிங் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வந்ததது இங்கிலாந்து. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றபோதிலும் தற்போது டிராவில் முடித்துள்ளது.
ஆஷஷ் கிரிக்கெட் 2023 தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாடி முடிக்கப்பட்டுள்ள நிலையில் 2-2 என்ற கணக்கில் தொடர் டிரா ஆகியுள்ளது. லண்டன் ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றன.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 395 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 384 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவெளிக்கு முன் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா, அந்த நாளின் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்தது.
பின் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா வெற்றிக்கு தேவை 249 ரன்கள் இருந்தன. சிறப்பாக பேட் செய்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்களான கவாஜா 72, வார்னர் 60 என அவுட்டாகினர்.
இவர்களை தொடர்ந்து ஸ்மித் 54, ஹெட் 43 ரன்கள் எடுத்தனர். அவ்வளவுதான் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க 334 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி, இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றது.
இங்கிலாந்து பவுலிங்கில் கிறஸ் வோக்ஸ் 4, மொயின் அலி 3, ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா அணி ஆர்ப்பாட்டமான தொடக்கத்தை தந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாக வேண்டும் என நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அதை சிறப்பாக கையாண்ட அந்த அணி தொடரை டிரா செய்துள்ளது. ஓட்டு டிராபோர்ட் மைதானத்தில் நடந்த நான்காவது போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழை காரணமாக கைவிடப்பட்டது. அந்த போட்டி நடைபெற்று இருந்தால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பார்முக்கு வெற்றி பெற்றிருக்க கூட வாயப்பு இருந்திருக்கும்.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்ற பிறகு அணியின் அணுகுமுறையானது வழக்கமான Defensive பாணியில் இருந்து விலகி அட்டாக் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக பேட்டிங்கில் டெஸ்ட் கிரிக்கெட் போல் நிதானம் காட்டாமல் ஒரு நாள், டி20 கிரிக்கெட் போல் அதிரடி பாணியை கையாண்டு வருகின்றனர். சேஸிங்கில் எவ்வளவு ரன் கொடுத்தாலும் துணிச்சலாக பேட் செய்து எதிரணிகளை திணறடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆஷஷ் தொடரில் முதலில் அடிவாங்கினாலும் பின் பலமான அடியை கொடுத்துள்ளது இங்கிலாந்து.
இந்த வெற்றியின் மூலம் உள்ளூரில் நடைபெற்ற ஆஷஷ் தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாக தக்கவைத்துள்ளது. கடந்த 2019இல் நடைபெற்ற தொடரிலும் 2-2 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டது.
இதன்பின்னர் 2022இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற தொடர் டிரா ஆகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்