Ashes 2023, Eng vs Aus: ஆஸி., பவுலர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் - தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023, Eng Vs Aus: ஆஸி., பவுலர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் - தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து

Ashes 2023, Eng vs Aus: ஆஸி., பவுலர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் - தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 01, 2023 11:56 PM IST

லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அதேசமயம் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போராடி வருகின்றனர்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பேட் கம்மின்ஸ் (இடது), அணியில் சரிவிலிருந்து மீட்டு நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்டோக்ஸ் மற்றும் டங்கெட்
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பேட் கம்மின்ஸ் (இடது), அணியில் சரிவிலிருந்து மீட்டு நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்டோக்ஸ் மற்றும் டங்கெட்

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஓபனிங் பேட்ஸ்மேன் டக்கெட் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா 58, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. நிதானமாக பேட் செய்து வந்த கவாஜா 77 ரன்களில் அவுட்டானார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தும் 34 ரன்களில் அவுட்டானார்.

முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டிய ஹெட் 7 ரன்களில் நடையை கட்டினார். பின்னர், கேமரூன் க்ரீன் 18, கேரி 21, ஸ்டார்க் 15, கம்மின்ஸ் 11 என சிறிய பங்களிப்பை அளித்தனர். காயத்தால் அவதிப்பட்ட லயன் பேட்டிங்கில் களமிறங்கி 13 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணி 279 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணி 370 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இங்கிலாந்து பவுலர்களில் ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டங் மற்றும் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 371 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலியா பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் கொடுத்தனர். ஓபனிங் பேட்ஸ்மேன் க்ராவ்லி 3, போப் 3, ஜோ ரூட் 18, ஹார் பரூக் 4 என 50 ரன்களுக்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் டாப் ஸ்கோரரான டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 69 ரன்கள் சேர்த்த நிலையில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

டாக்கெட் 50, ஸ்டோக்ஸ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பேர்ஸ்டோ மட்டுமே பேட்ஸ்மேனாக உள்ளார். ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

கடைசி நாளான நாளை இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 257 ரன்கள் தேவைப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்க வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை.

இந்த போட்டியை ஆஸ்திரேலியா வென்றால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெறும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் 1-1 என்ற சமநிலை பெறும். போட்டி டிரா ஆனாலும் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.