Ashes 2023: 10 ஆண்டுகள் கழித்து அணியில் இவரை மிஸ் செய்யும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா அணி 10 ஆண்டுகள் கழித்து முக்கிய பவுலர் ஆடும் லெவனில் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முக்கிய பவுலரான நாதன் லயன் இல்லாமல் களமிறங்குகிறது. லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின்போது கால் பின்பகுதி தசையில் லயனுக்கு பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய லயன், மறுநாளில் ஊன்றுகோள் உதவியுடன் மைதானத்துக்கு வந்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், அந்தப் போட்டியிலிருந்து விலகினார் லயன். அவரது காயத்தை ஆய்வு செய்த மருத்துவ குழுவினர் தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்திய நிலையில், ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார்.
கடந்த 10 ஆண்டுகள் ஆஸ்திரேலியா விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் நாதன் லயன் இடம்பிடித்திருந்தார். இதையடுத்து தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி அவர் மிஸ் செய்கிறது. லயனுக்கு பதிலாக மற்றொரு ஆஃப் ஸ்பின்னரான டோட் முர்பி ஆஸ்திரேலியா அணியின் ஆடும் லெவனில் இன்றைய போட்டியில் இடம்பெறுவார் என தெரிகிறது.
ஆஸ்திரேலியா அணியின் முக்கிய ஸ்பின்னராக இருந்து வந்த லயன், அந்த அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2013 முதல் தற்போது வரை ஒரு போட்டி கூட மிஸ் செய்யாத இவர், தற்போது காயம் காரணமாக விலகியுள்ளார்.
2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணியில் ஸ்பின்னராக அறிமுகமானார் லயன். அப்போது முதல் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வரும் இவர், இதுவரை 2 போட்டிகள் மட்டுமே மிஸ் செய்துள்ளது. அதுவும் 2013 ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் அணியில் இடம்கிடைத்து விளையாடி வரும் லயன் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
கடைசியாக லயன் இடம்பெறாத போட்டியில் அணியின் ஸ்பின்னராக ஆஸ்டன் அகர் இடம்பிடித்திருந்தார். அணியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் இருந்தார். இந்த போட்டி ஜூலை 18 முதல் 21 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
தற்போது அணியில் இருக்கும் வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவஜா ஆகிய இருவர் மட்டுமே அந்த போட்டியில் விளையாடினர்.
2023 ஆஷஸ் தொடரில் விளையாடியிருக்கும் இரண்டு போட்டிகளையும் சேர்த்து நாதன் லயன் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்