Fifa Qualifiers: உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் சொந்த மண்ணில் முதல் தோல்வி-பிரேசில் அணி அதிர்ச்சி
ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஆட்டம் தாமதமாக தொடங்கியது. அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் பிரேசில் அணி, சொந்த மண்ணில் முதல் தோல்வியைச் சந்தித்தது. அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் பிரேசில் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் மரகானா மைதானத்திற்கு வந்தனர். ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஒரு கோலைப் பதிவு செய்தார்.
சொந்த மண்ணில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பிரேசில் முதல்முறையாக தோல்வியைத் தழுவியது. இது ரவுண்ட்-ராபின் போட்டியில் பிரேசிலின் தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியாகும் - புதிய பயிற்சியாளர் பெர்னாண்டோ டினிஸுக்கு மற்றொரு வேதனையை அளித்துள்ளது.
பிரேசில் ரசிகர்களின் ஏளனங்கள் மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில் 78வது நிமிடத்தில் மெஸ்ஸி மைதானத்தை விட்டு வெளியேறினார். மெஸ்ஸியை அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் வந்திருந்தனர்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பிரேசிலுக்கு எதிராக மெஸ்ஸி கோல் பதிவு செய்ய இயலவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா ஒரு இதே மைதானத்தில் ஒரு கோலை அடித்து தனது அணிக்கு கோபா அமெரிக்கா பட்டத்தை வெல்ல உதவினார்.
முன்னதாக,
தேசிய கீதங்கள் ஒலித்த சிறிது நேரத்திலேயே தொடங்கிய போட்டிக்கு முந்தைய வன்முறை சம்பவத்தால், 27 நிமிடங்களுக்கு ஆட்டம் தடைப்பட்டது. மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 22 நிமிடங்கள் அறையிலேயே இருந்தது. வன்முறையில் ரசிகர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த மோதல் காரணமாக எட்டு பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
பிரேசிலின் பெரிய நம்பிக்கைகளில் ஒருவரான எண்ட்ரிக், கோல் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை.
அர்ஜென்டினா 10 அணிகள் கொண்ட தென் அமெரிக்க தகுதிப் சுற்றில் ஆறு போட்டிகளில் 15 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது.
செவ்வாயன்று, கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது; மான்டிவீடியோவில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வென்றது; மற்றும் ஈக்வடார் 1-0 என சிலியை முதலிடம் பிடித்தது.
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போட்டி முடிவடைந்த நேரத்தில் பெருவும் வெனிசுலாவும் விளையாடிக் கொண்டிருந்தன.
டாபிக்ஸ்