Ambati Rayudu: 2019 உலகக் கோப்பை தொடரில் கழட்டிவிடப்பட்ட பின்னணி - ராயடு பகிர்ந்த பழைய பிரச்னை
வேண்டுமென்றே கூட அவ்வாறு செய்திருக்கலாம் என ஐசிசி உலகக் கோப்பை 2019 தொடரில், தான் ஓரங்கட்டப்பட்ட காரணம் குறித்து மனம் திறந்துள்ளார் சிஎஸ்கே பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு.
ஆந்திராவை சேர்ந்த 37 வயதாகும் அம்பத்தி ராயுடு, நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடருடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் பிரபல தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக ராயுடு கூறியதாவது:
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் தேர்வாளர்களாக இருந்தவர்களிடம் சில பிரச்னை ஏற்பட்டதே, நான் 2019 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகாமல் போனதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் 2018இல், 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஏற்ப தயாராகும் படி தெரிவித்தார்கள். ஆனால் பழைய பிரச்னை மனதில் வைத்து வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம்.
சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு வீட்டில் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் சிஎஸ்கே அணியில் இருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2019 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் நம்பர் 4 பேட்ஸ்மேன் இடத்தை நிரப்புவதற்கு பல்வேறு பரிசோதனை முயற்சிகளை இந்திய அணி மேற்கொண்டது. அப்போது சுழற்சி முறையில் வெவ்வேறு வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து அந்த இடத்தை நிரப்புவதற்கான வீரர்களின் லிஸ்டில் பிரதனமாக இருந்தவர் அம்பத்தி ராயுடு. ஆனால் கடைசி நேரத்தில் திடீர் டுவிஸ்டாக, சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான அனுபவத்தை பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு 2019 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், 3டி (மூன்று பரிணாமங்களிலும்) அம்சம் கொண்ட வீரராக விஜய் சங்கர் இருப்பதாக, அவரது தேர்வுக்கு அப்போது தேர்வு குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் விளக்கமும் அளித்தார்.
இதை கிண்டல் செய்யும் விதமாக 3டி கண்ணாடி ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார் அம்பத்தி ராயுடு. அவரது டுவிட் வைரலானது.
2019 உலகக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கர் 58 ரன்கள் எடுத்ததுடன், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை மட்டும் எடுத்தார். இதையடுத்து கால்விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக பாதியிலேயே தொடரை விட்டு வெளியேறினார். அவரது தேர்வால் அணிக்கு எந்த வித தாக்கமும் ஏற்படவில்லை தொடரின் முடிவுக்கு பின்னர் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அதேபோல் அம்பத்தி ராயுடுவும் 2019க்கு பின்னர், இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதற்கு முன்னதாக இந்தியாவுக்காக 55 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், மொத்தமாக 1736 சர்வதேச ரன்கள் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 3 சதமும், 10 அரைசதமும் அடித்துள்ளார்.
291 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராயுடு, 6028 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 31 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளுக்கு மட்டுமே விளையாடியிருக்கும் இவர். 6 முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரராக உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்