5 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  5 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி!

Manigandan K T HT Tamil
Jun 28, 2023 08:35 PM IST

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் நடந்த பைனலில் ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தமிழ்நாடு மகளிர் அணி.

சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினர்
சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினர் (@Udhaystalin)

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் நடந்த பைனலில் ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தமிழ்நாடு மகளிர் அணி.

தமிழ்நாடு வீராங்கனை இந்துமதி, நந்தினி ஆகியோர் தலா ஒரு கோல் பதிவு செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின், மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற அணிக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

27வது ஹீரோ சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு வாழ்த்துகள். ஹரியானாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் எங்கள் வீரர்களை வீழ்த்திய ஆட்டம் அபாரமாக இருந்தது.

நமது வீராங்கனைகள் 11 பேர் SDAT விடுதிகளின் முன்னாள் மாணவர்கள் என்பதால் நாங்கள் இன்னும் பெருமைப்படுகிறோம்.

இறுதிப்போட்டியில் சந்தியா மற்றும் இந்துமதி ஆகியோரின் அபாரமான கோல்களுக்காகவும், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

#நம்ம சாம்பியன்ஸ் என்ற ஹேஷ்டேக்கை அவர் உடன் பதிவு செய்திருந்தார்.

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. வலுவான ஹரியானாவை 2:1 என்ற கணக்கில் தோற்கடித்தது். நமது மகளிர் தேசிய சாம்பியனுக்கு பாராட்டுக்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் அணியினர் நடனம் ஆடினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.