SL vs AFG: முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி.. வீழ்ந்தது இலங்கை!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sl Vs Afg: முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி.. வீழ்ந்தது இலங்கை!

SL vs AFG: முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி.. வீழ்ந்தது இலங்கை!

Karthikeyan S HT Tamil
Jun 02, 2023 07:49 PM IST

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்.

இதனைத்தொடர்ந்து இலங்கை அணியின் நிசாங்க, கருரத்ணே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், கருணாரத்னே 4 ரன்னிலும் நிசாங்கா 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குசல் மென்டிஸ் 11, மேத்யூஸ் 12 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 84 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

இதையடுத்து அசலங்கா, மற்றும் டி செல்வா கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்திய டி செல்வா 51 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். அடுத்து வந்த சனகா 17 ரன்னிலும் தசுன் ஹெமந்தா 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 98 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். ரஹ்மத் ஷா 55 ரன்களும் ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்களும் விளாசியிருந்தனர். இந்த வெற்றியின் மூக்லம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலையில் வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.