India A Team: எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா ஏ டீம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India A Team: எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா ஏ டீம்

India A Team: எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா ஏ டீம்

Manigandan K T HT Tamil
Jul 17, 2023 08:00 PM IST

இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் நேபாளம் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அரை சதம் விளாசிய சாய் சுதர்ஷன், வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
அரை சதம் விளாசிய சாய் சுதர்ஷன், வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் (@BCCI)

இந்திய அணி இதுவரை நடந்த 2 ஆட்டங்களில் ஜெயித்துள்ளது.

குரூப் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. இப்போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 13ம் தேதி இப்போட்டித் தொடங்கியது.

ஜூலை 23ம் தேதி வரை 15 ஒரு நாள் ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று குரூப் பிரிவில் நடந்த ஆட்டத்தில் நேபாளம் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் நேபாளம் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் ரோஹித் பவுடெல் அரை சதம் விளாசினார்

இந்தியா சார்பில் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும், நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகளை சுருட்டினர்.

ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி விளையாடியது. தொடக்க வீரராக சாய் சுதர்ஷன் களமிறங்கினார். அரை சதம் விளாசிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்றொரு வீரரான அபிஷேக் சர்மா 87 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 21 ரன்கள் விளாசினார். இவ்வாறாக இந்தியா ஏ அணி, 22.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்து ஜெயித்தது.

அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. ஆட்டநாயகனாக அபிஷேக் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.