தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl 2023 சீசனில் அதிக ஸ்கோர் விளாசி கவனம் ஈர்த்த 20 வயது வீரர்!

TNPL 2023 சீசனில் அதிக ஸ்கோர் விளாசி கவனம் ஈர்த்த 20 வயது வீரர்!

Manigandan K T HT Tamil
Jul 13, 2023 07:00 AM IST

அதுவரை அவரே டாப் ஸ்கோரராக இருந்தார். அவர் இல்லாத நிலையில், அஜிதேஷ் அந்த இடத்தை பிடித்தார்.

நெல்லை வீரர் அஜிதேஷ்
நெல்லை வீரர் அஜிதேஷ் (tnpl)

ட்ரெண்டிங் செய்திகள்

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். அவர் இந்த சீசனில் கவனத்தை ஈர்த்துள்ளார். கோவை அணியில் கலக்கிவந்த சாய் சுதர்ஷன், துலீப் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக பாதியில் விலகினார்.

அதுவரை அவரே டாப் ஸ்கோரராக இருந்தார். அவர் இல்லாத நிலையில், அஜிதேஷ் அந்த இடத்தை பிடித்தார்.

கடந்த ஆண்டு தனது முதல் சீசனில் கூட அஜிதேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இது அவரை தமிழ்நாடு டி 20 அணியில் சேர்க்க போதுமானதாக இருந்தது.

டி.என்.பி.எல்லின் ஒவ்வொரு சீசனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்திறன் மூலம் ஒரு அற்புதமான வீரர் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளனர்.

2016-ல் டி.நடராஜன், 2018-ல் வருண் சக்ரவர்த்தி, சமீபத்தில் ஷாருக்கான், பி.சாய் சுதர்சன் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். நெல்லை ராயல் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் முக்கிய பங்கு வகித்த ஜி.அஜிதேஷ் இந்த ஆண்டு அறியப்பட்ட சிறந்த வீரர்களில் ஒருவர்.

கடந்த ஆண்டு தனது முதல் சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் அஜிதேஷ்.

"நான் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமான ரோலை கொண்டிருந்தேன். அணிக்காக பல ஆட்டங்களை வெல்ல முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறுகிறார் அஜிதேஷ்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் கர்நாடகாவில் விளையாடிய அஜிதேஷ், வாய்ப்புகள் இல்லாததால் அணியில் இருந்து விலகினார். அவரை கோவைக்கு அழைத்து வந்தார் தமிழக வீரர் சுனில் சாம்.

பின்னர், நெல்லை அணியின் மென்டர் ஏ.ஜி.குருசாமியிடம் பயிற்சி பெற்றார்.

பைனலில் 1 ரன்னில் போல்டு ஆனார். இருந்தாலும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

இந்த சீசனில் 10 ஆட்டங்களில் விளையாடி அஜிதேஷ், 385 ரன்களை விளாசியிருக்கிறார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 112. பேட்டிங் சராசரி 76.80. மொத்தம் 234 பந்துகளை எதிர்கொண்ட அஜிதேஷ், 1 சதம், 3 அரை சதங்களை விளாசினார். இந்த சீசனில் மொத்தம் 34 ஃபோர்ஸையும், 21 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் அஜிதேஷ்.

WhatsApp channel

டாபிக்ஸ்