Sun – Mars: மகரத்தில் சேரும் சூரியன் - செவ்வாய்: வெல்லப்போகும் ராசிகள்
- ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் தைரியத்தைத் தரக்கூடியவர். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் பகவான், மகர ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
- ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் தைரியத்தைத் தரக்கூடியவர். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் பகவான், மகர ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
(1 / 7)
அப்போது மகரத்தில் சூரியனும் சஞ்சரித்து வரும் நிலையில் செவ்வாயும் இணைவதால் சில ராசியினர் அபரிவிதமான பலன்களைத் தரும். அப்படி வெற்றி வாகை சூடும் நற்பேறு வாய்த்துள்ள ராசிகள் குறித்துக் காணலாம்.
(2 / 7)
மேஷம்: இந்த ராசியினருக்கு மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் இணைவால் ஆதித்ய மங்கள யோகம் உண்டாகிறது. தொழிலில் முன்னேற்றம் பெறும் வாய்ப்பு உண்டாகியுள்ளது. பணியிடத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பணிவாய்ப்பு கிடைக்கும். சைடு பிசினஸ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
(3 / 7)
ரிஷபம்: இந்த ராசியினருக்கு இத்தனை நாட்களாக இல்லறத்துணையுடன் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நிதி நிலை மேம்படும். சிறுதொழில் முனைவோருக்கு நல்ல லாபம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். வீட்டில் வசதிகள் அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
(4 / 7)
துலாம்: இந்த ராசியினருக்கு இக்காலத்தில் நீங்கள் நினைத்த இடத்தில் வேலைக்கு முயற்சிகள் செய்யும்பட்சத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சில தடைகள் வந்துபோகும். அனைத்து பணிகளும் வேகம் எடுக்கும். புதிய தொழில்முனைவோருக்கு ஏற்ற காலகட்டம் இதுவாகும்.
(5 / 7)
பிரதமர் மோடி விருச்சிகராசிக்காரர்தான். அவரை 50 வயது வரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் சடாரென்று முதலமைச்சர் ஆனார். அடுத்ததாக பிரதமர் ஆனார். இப்படியான திடீர் யோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமையும்.
(6 / 7)
மீனம்: இக்காலகட்டத்தில் உங்கள் வீட்டில் விருப்பமான பொருட்களை வாங்கிப்போடுவீர்கள். உடல் நலம் மேம்படும். படிப்பில் சுட்டியாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வங்கியில் நிதியிருப்பு மேம்படும்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்