பலப்படுத்தப்படும் உங்கள் வாட்ஸ்அப் தனியுரிமை! Last Seen அம்சத்தில் புதிய மாற்றம்
- புதிய செயல்பாடுகளை இணைப்பது, பழையதை மேம்படுத்துவது என வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது அப்டேட்கள் வருகின்றன. தற்போது பயனாளர்களின் தனியுரிமையை பராமரிக்கும் விதமாக புதிய அம்சம் ஒன்று அறிமுகமாகிறது. “last seen” என்ற அம்சத்தில், குறிப்பிட்ட சிலர் பார்க்காமல் மறைக்கும் புதிய வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது.

(1 / 5)
விரைவில் இந்த புதிய அம்சத்தை பயனாளர்கள் பெறலாம். அதன்பின்னர் தங்களது மொபைலில் இருக்கும் குறிப்பிட்ட எண்கள் நமது தனிப்பட்ட தகவல்களை பார்க்க முடியாத வண்ணம் மறைத்து (Hide) கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
(2 / 5)
"last seen" என்ற அம்சத்தை உங்கள் போனில் தொடர்பில் இல்லாத நபரோ அல்லது அனைவருமோ பார்க்க முடியாத வகையில் மறைத்து வைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் பயனாளரின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதால் அவர்களுக்கு வசதியான உணர்வை ஏற்படும் என நம்பபப்படுகிறது.(Reuters)
(3 / 5)
அதேபோல் வாட்ஸ்அப் புரொஃபல் புகைப்படம் மற்றும் About பகுதிகளை காணும் வசதியை தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் விதமாக சுருக்கி கொள்ளலாம்(Pixabay)
(4 / 5)
Last Seen, About, புரொஃபல் புகைப்படம் போன்றவற்றில் விரைவில் “My Contacts Except…” என்ற அம்சம் தோன்றும் என கூறப்படுகிறது. இதன்மூலம் மேற்கூறிய வசதிகளை பெறலாம்(Pixabay)
(5 / 5)
அப்டேட் செய்யப்பட்ட பிறகு இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் மொபைலில் இருக்கும் குறிப்பிட்ட தொடர்புகள் நீங்கள் பார்த்த last seen-ஐ பார்க்காதவாறு மறைத்து கொள்ளலாம். இதற்கு முன்னதாக இந்த அம்சத்தை பயன்படுத்தினால் தொடர்பில் உள்ள அனைவருக்கும் last seen மறைந்து விடும். ஆனால் அதற்கு விடிவுகாலமாக தற்போதைய புதிய அப்டேட் அமைந்துள்ளது(Pixabay)
மற்ற கேலரிக்கள்