Pongal 2024: பொங்கல் பண்டிகை கொண்டாடுவது ஏன்?
- உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவான். அவருக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை.
- உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவான். அவருக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை.
(1 / 6)
சூரிய பகவான் மகர ராசியில் நுழைவதை குறிக்கும் தை முதல் நாளை பொங்கலாக கொண்டாடுகிறோம். இந்த மகர ராசி பிரவேசத்தை தமிழ் பேசாதவர்களும் கூட 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.(Getty Images)
(2 / 6)
தைப்பொங்கல் என்பது நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமான பண்டிகையாகும். குறிப்பாக விவசாயத்திற்கு எதெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறி வணங்குவது இதன் சிறப்பம்சமாகும். இது அறுவடை திருவிழா எனவும் அழைக்கப்படுகிறது.(Getty Images)
(3 / 6)
பொங்கல் விழா சில இடங்களில் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பொங்கலாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கும் பொங்கல் பண்டிகை ஜனவரி 17 அன்று நிறைவடைகிறது. (Getty Images)
(4 / 6)
தமிழ் மாதத்தின் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை. அன்று சூரியனை வணங்கிப் பொங்கலிட்டு கரும்பு, பழங்கள், காய்கறிகள், வெற்றிலை, பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும். வீட்டில் சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்பு.(Getty Images)
(5 / 6)
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு. (Getty Images)
மற்ற கேலரிக்கள்