Dry Fruits Eating Tips: எந்தெந்த உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடக்கூடாது..தெரிஞ்சுகோங்க-which dry fruits should be soaked and eaten what should be eaten directly - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dry Fruits Eating Tips: எந்தெந்த உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடக்கூடாது..தெரிஞ்சுகோங்க

Dry Fruits Eating Tips: எந்தெந்த உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடக்கூடாது..தெரிஞ்சுகோங்க

Sep 04, 2024 04:10 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 04, 2024 04:10 PM , IST

Dry Fruits Eating Tips: உலர் பழங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாக உள்ளது. உலர் பழங்களை நேரடியாக சாப்பிட்டாலும், தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டாலும் அதன் நன்மைகளை பெறலாம். எந்தெந்த உலர் பழங்களை எப்படி சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாக பெறலாம் என்பதை பார்க்கலாம்

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பலரும் உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் எல்லா உலர் பழங்களையும் அப்படி செய்ய கூடாது. சில வகையான உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்துவிடும். எனவே எந்தெந்த பழங்களை ஊறவைக்க கூடாது என்பதை பார்க்கலாம்

(1 / 8)

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பலரும் உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் எல்லா உலர் பழங்களையும் அப்படி செய்ய கூடாது. சில வகையான உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்துவிடும். எனவே எந்தெந்த பழங்களை ஊறவைக்க கூடாது என்பதை பார்க்கலாம்(shutterstock)

உலர் பழங்களில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவையாக இருக்கின்றன

(2 / 8)

உலர் பழங்களில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவையாக இருக்கின்றன(shutterstock)

பாதாமை ஊற வைத்து சாப்பிட வேண்டும். இவற்றில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பாதாம் தோல்களில் டானின்கள் உள்ளன. இவை உடலில் செரிமான பிரச்னைகளை உண்டாக்கும். எனவே பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது

(3 / 8)

பாதாமை ஊற வைத்து சாப்பிட வேண்டும். இவற்றில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பாதாம் தோல்களில் டானின்கள் உள்ளன. இவை உடலில் செரிமான பிரச்னைகளை உண்டாக்கும். எனவே பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது(shutterstock)

பாதாம் போல் கொட்டைகளை ஊறவைத்து உண்ண வேண்டும். இதில் பல வகையான கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், தாதுக்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவும். இவற்றை பால் அல்லது தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

(4 / 8)

பாதாம் போல் கொட்டைகளை ஊறவைத்து உண்ண வேண்டும். இதில் பல வகையான கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், தாதுக்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவும். இவற்றை பால் அல்லது தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்(shutterstock)

அத்திப்பழத்தில் வெப்பமூட்டும் தன்மை உள்ளது. அதனால் அவற்றை நேரடியாகச் சாப்பிடக் கூடாது. ஊறவைத்து சாப்பிட வேண்டும்

(5 / 8)

அத்திப்பழத்தில் வெப்பமூட்டும் தன்மை உள்ளது. அதனால் அவற்றை நேரடியாகச் சாப்பிடக் கூடாது. ஊறவைத்து சாப்பிட வேண்டும்(shutterstock)

திராட்சையை ஊற வைக்கக் கூடாது. ஊறவைத்தால், அவை ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. எனவே அவற்றை நேரடியாக உண்ண வேண்டும்

(6 / 8)

திராட்சையை ஊற வைக்கக் கூடாது. ஊறவைத்தால், அவை ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. எனவே அவற்றை நேரடியாக உண்ண வேண்டும்(shutterstock)

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை மூளை மற்றும் குடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. ஆளி விதைகளை ஊறவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை வறுத்து உலர்த்தி சாப்பிட வேண்டும்

(7 / 8)

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை மூளை மற்றும் குடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. ஆளி விதைகளை ஊறவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை வறுத்து உலர்த்தி சாப்பிட வேண்டும்(shutterstock)

பேரீச்சம்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட கூடாது. பேரீச்சம்பழத்தை ஊறவைப்பதால் தண்ணீரில் அதன் குணங்கள் கரைந்துவிடும்

(8 / 8)

பேரீச்சம்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட கூடாது. பேரீச்சம்பழத்தை ஊறவைப்பதால் தண்ணீரில் அதன் குணங்கள் கரைந்துவிடும்(shutterstock)

மற்ற கேலரிக்கள்