Ambedkar Row: சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து என்ன?
- சட்டமேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் என்ன கருத்தை தெரிவித்தார், எதற்காக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன? என்பது குறித்து பார்ப்போம்.
- சட்டமேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் என்ன கருத்தை தெரிவித்தார், எதற்காக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன? என்பது குறித்து பார்ப்போம்.
(1 / 7)
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தை அவர் நேற்று தெரிவித்திருந்தார். அவர் என்ன கருத்து தெரிவித்தார், அது ஏன் இவ்வளவு சர்ச்சையாகி இருக்கிறது என பார்ப்போம்.(HT_PRINT)
(2 / 7)
அமித் ஷா தனது உரையின்போது, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, "இன்றைய நிலையில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது" என்றார் அவர். அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாக நேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்வாறு தெரிவித்தார்.(PTI)
(3 / 7)
"இது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர்... இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.(PTI)
(4 / 7)
இந்தக் கருத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படம் உள்ள பதாகைகளை ஏந்தி அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.(Rahul Singh )
(5 / 7)
இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.(Rahul Singh )
(6 / 7)
“எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்" என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.(PTI)
(7 / 7)
மாநிலங்களவையில் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பதிலளித்தார், தலித் ஐகானின் பாரம்பரியத்தை அழிக்க காங்கிரஸ் மோசமான தந்திரங்களை விளையாடியது என்று பிரதமர் மோடி கூறினார். அமித் ஷாவின் கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்துக் கூறுவதாக பாஜக குற்றம் சாட்டியது. (Sansad Tv)(HT_PRINT)
மற்ற கேலரிக்கள்