Wayanad landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!
- Wayanad landslides: நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜூலை 23 அன்று ஒன்பது NDRF குழுக்கள் மையத்தால் அனுப்பப்பட்டன. கேரள அரசு என்ன செய்தது? கேரள அரசு ஏன் மக்களை வெளியேற்றவில்லை? என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
- Wayanad landslides: நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜூலை 23 அன்று ஒன்பது NDRF குழுக்கள் மையத்தால் அனுப்பப்பட்டன. கேரள அரசு என்ன செய்தது? கேரள அரசு ஏன் மக்களை வெளியேற்றவில்லை? என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 8)
ஜூலை 23-ம் தேதி கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரள அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். (SansadTV)
(2 / 8)
மேலும் மூன்று நாட்களுக்கு எச்சரிக்கைகள் தொடரும் என்றும், ஜூலை 26 ஆம் தேதி, 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்து உள்ளது. மண் சரிவு சேறும் சகதியுமாக இருக்கும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றும் எச்சரித்ததாக உள்துறை அமைச்சர் கூறினார்.(AFP)
(3 / 8)
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்திய அரசின் வானிலை எச்சரிக்கை அமைப்பு குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். தயவுசெய்து மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையைப் படியுங்கள்" என்று கூறினார். (SansadTV)
(4 / 8)
மத்திய அரசின் எச்சரிக்கையை பல மாநில அரசுகள் பின்பற்றியதால், பேரிடர் மேலாண்மையில் உயிர்ச்சேதம் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார். (AFP)
(5 / 8)
“ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, சுமார் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே புயல் குறித்த எச்சரிக்கையை அனுப்பியிருந்தோம், துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார். புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்ற எச்சரிக்கை குஜராத் அரசுக்கு அனுப்பினோம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்று அவர் கூறினார். (PTI)
(6 / 8)
2014-க்குப் பிறகு இந்திய அரசு முன்கூட்டிய வானிலை எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், அதற்காக ரூ. 2000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டு, இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்படும். மழை, வெப்பம், புயல், மின்னல் போன்றவற்றுக்கும் உரிய எச்சரிக்கை அமைப்பு உள்ளது என்று அமித்ஷா கூறினார்.(AFP)
(7 / 8)
நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜூலை 23 அன்று ஒன்பது NDRF குழுக்கள் மையத்தால் அனுப்பப்பட்டன. கேரள அரசு என்ன செய்தது? கேரள அரசு ஏன் மக்களை வெளியேற்றவில்லை? என அமித்ஷா கேள்வி எழுப்பினார். (PTI)
(8 / 8)
கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி மற்றும் அதிகாலை 4.10 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் இதுவரை 167க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றுவதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(AFP)
மற்ற கேலரிக்கள்