Vinayagar Chaturthi:ஜெயிலர், ராயப்பன், புஷ்பா!வரிசை கட்டும் விநாயகர் அவதாரங்கள்
- நாடு முழுவதும் இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி இருந்து வருகிறது. பூஜை, படையல், கொண்டாட்டம் இவற்றையெல்லாம் கடந்து ஆண்டுதோறும் புதிய அவதாரம் எடுக்கும் ஒரே கடவுளாக விநாயகர் இருந்து வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் எடுத்துள்ள அவதாரங்கள் சிலவற்றை காணலாம்.
- நாடு முழுவதும் இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி இருந்து வருகிறது. பூஜை, படையல், கொண்டாட்டம் இவற்றையெல்லாம் கடந்து ஆண்டுதோறும் புதிய அவதாரம் எடுக்கும் ஒரே கடவுளாக விநாயகர் இருந்து வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் எடுத்துள்ள அவதாரங்கள் சிலவற்றை காணலாம்.
(1 / 8)
எந்த கோயிலுக்கு சென்றாலும் அங்கே இருக்கும் பொதுவான கடவுளாக இருந்து வருகிறார். கோயில் மட்டுமல்ல வேறு பொதுஇடங்களுக்கு சென்றாலும் சூழலுக்கு ஏற்ப பெயரை பெற்று தவறாமல் தன்னை வணங்க செய்யும் கடவுளாக இருக்கும் விநாயகர் ஜெயிலில் விடுதலை விநாயகர், சாலையில் வழிவிடு விநாயகர், திருமண மண்டபங்களில் மாப்பிள்ளை விநாயகர் என்ற பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவற்றுக்கு அடுத்தப்பட்டியாக தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும், ட்ரெண்டிங் கலாச்சரத்துக்கு ஏற்ப அக்னிவீர் விநாயகர், புஷ்பா விநாயகர், ஜெயிலர் விநாயகர் என்று உருமாறியுள்ளார்
(2 / 8)
பாகுபலி படத்தின் ரிலீஸுக்கு பின்பு மிகவும் பிரபமான அவதாரமாக இந்த பாகுபலி விநாயகர் உள்ளார். அதுவும் சிவலிங்கத்தை தூக்கியபடி இருக்கும் இந்த தோற்றம் அனைவராலும் விரும்பக்கூடயதாக உள்ளது
(3 / 8)
இந்த ஆண்டின் புதிய வரவுதான் இந்த ஜெயிலர் விநாயகர். விடுதலை விநாயகரின் அப்கிரேட் வெர்ஷன் என்று சொல்லலாம். சிறையில் இருப்பவர்கள் விடுதலை பெறவதற்கான வணங்கும் கடவுள் விடுதலை விநாயகர் என்றால், சிறையில் இருக்கும் அடங்காத கைதிகளின் கண்களில் விரலை விட்டும் ஆட்டும் கண்டிப்பான விநாயகர் இந்த ஜெயிலர் விநாயகர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தின் போஸ்டரால் ஈர்க்கப்பட்டு உருவானது இந்த ஜெயிலர் அவதாரம்
(4 / 8)
இந்த ஆண்டின் மற்றொரு ரிலீஸாக ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ராம்சரண் லுக்கில் உள்ள சீதாராம் ராஜூவின் அதிரடியான அவதாரம்.
(5 / 8)
இதற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் மிக முக்கியமான அவதாரமாக இந்த புஷ்பா விநாயகர் அவதாரம் அமைந்துள்ளது. தனது கைகளில் தடையில் வைத்து புஷ்பா கேரக்டர் மூலம் நாடு முழுவதும் ட்ரெண்டானர் அல்லு அர்ஜூன். அவரை போல் இந்த புஷ்பா விநாயகர் தான் இந்த ஆண்டில் அதிகம் பேரலால் கவரப்பட்ட அவதாரமாக அமைந்துள்ளது
(6 / 8)
அதே லுக், அதே கெத்து, புஷ்பாவின் ஆடை என முழு புஷ்வாக மாறியிருக்கும் இந்த அவதாரம் வைரல் மெட்டீரியலாக உள்ளது
(7 / 8)
பிகில் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனாலும் தோன்றிய ராயப்பானாக ரசிகர்கள் மனதில் நீங்காமல் குடியிருந்து வருகிறார் தளபதி விஜய். இப்போது ராயப்ப விநாயகராகவும் அவதாரம் எடுத்து தளபதி விஜய் சொல்வது போல் பலரது நெஞ்சில் குடிபுகுந்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்