Vijaysethupathi: மீண்டும் ஏமாற்றம்.. ‘உங்க காத கொண்டு ‘கதை களத்துல’ வைய்ங்க.. ‘மகாராஜா’ ஏன் சேதுவுக்கு தோல்வி படம்?-vijaysethupathi nithilan saminathan maharaja movie review rating - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vijaysethupathi: மீண்டும் ஏமாற்றம்.. ‘உங்க காத கொண்டு ‘கதை களத்துல’ வைய்ங்க.. ‘மகாராஜா’ ஏன் சேதுவுக்கு தோல்வி படம்?

Vijaysethupathi: மீண்டும் ஏமாற்றம்.. ‘உங்க காத கொண்டு ‘கதை களத்துல’ வைய்ங்க.. ‘மகாராஜா’ ஏன் சேதுவுக்கு தோல்வி படம்?

Jun 14, 2024 04:07 PM IST Kalyani Pandiyan S
Jun 14, 2024 04:07 PM , IST

Vijaysethupathi:  படத்தில் நான் லீனியர் திரைக்கதை சுவாரசியம் கூட்டினாலும், கதை ஏற்கனவே பார்த்து பழகி போனதாக அமைந்த காரணத்தால், விஜய்சேதுபதி எனும் இங்கும் தோற்றே நிற்கின்றார். ஆகையால் இனி, கதைகளை தேடாமல், புதிய கதை களத்தை தேடுங்கள் சேது 

Vijaysethupathi: மீண்டும் ஏமாற்றம்.. ‘உங்க காத கொண்டு ‘கதை களத்துல’ வைய்ங்க..  ‘மகாராஜா’ ஏன் சேதுவுக்கு தோல்வி படம்? 

(1 / 8)

விஜய்சேதுபதி நடிப்பில், குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப்படம் சேதுவின் 50 வது திரைப்படமாக வெளியான காரணத்தாலும், ட்ரெயிலர் ஏற்படுத்திய தாக்கத்தாலும், இந்தப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், இன்றைய தினம் படம் வெளியாகி இருக்கிறது. படத்தை பற்றி பார்க்கலாம். 

(2 / 8)

விஜய்சேதுபதி படம் என்றாலே, நல்லக்கதையாகவோ, வித்தியாசமான கதைக்களமாகவோ இருக்கும் என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த பெயர் மாறி, விஜய்சேதுபதி திரைப்படமா ரிவியூ பார்த்துட்டு போலாமே என்ற கட்டத்திற்கு வந்து விட்டது. அதற்கு சான்றுகள்தான் சமீபத்தில் வெளியான அவரின் தோல்வி படங்கள்

(3 / 8)

இந்தப்படமும் கிட்டத்தட்ட அந்த வகையிறாதான்.  ‘பால் பிடிக்க பின்னாடியே போனேனா’ என்று நடுவுல  கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கிடைத்த ஹிட் மாடுலேஷனை, தன்னுடைய 50 வது படத்திலும் முன்மொழிந்து, படத்தை ஆரம்பிக்கிறார் விஜய்சேதுபதி. ஷார்ட் கட் ஹேர்ஸ்டைல், அப்பாவியான முகம், காதில் ஒரு பேண்டேஜ், இரக்கமே இல்லாத கண்கள்.. கேரக்டரை பார்த்த உடனே பிடித்துப்போவதற்கான அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் நித்திலன்.  

(4 / 8)

விஜய்சேதுபதி ஆரம்பிக்கும் டயலாக் மாடுலேஷனை ஆரம்பிக்கும் போதே, இது அதுல்ல என்ற சிரிப்பை கொடுத்தாலும்,  அடேய் 50 வது படத்திலுமா?  புதுசா எதுவும் இல்லையா என்று கேட்க வைத்தது. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காமெடி களேபரங்களில், சக நடிகர்கள் வெளிப்படுத்தும் முகபாவங்கள் சில இடங்களில் செயற்கையாக இருந்தாலும், சிரிக்க வைக்கின்றன.  

(5 / 8)

குறிப்பாக, திருடனாக ஸ்டேஷனுக்குள் இருக்கும் கல்கி வெளிப்படுத்திய நடிப்பு சிறப்பு. இன்னொரு பக்கம் நான் லீனியரில் காட்சிகள் கதையின் அடிநாதத்தை பிடித்துச்செல்ல, நாமும் சீட்டின் நுனியில் வந்து விடுகிறோம். போலீஸ் தேடும் லட்சுமி கதாபாத்திரம் கேட்பதற்கு ஆர்வமாக இருந்தாலும், அதன் பின்னால் நிச்சயமாக வேறு ஒன்று இருக்கிறது என்று நமது ஊகிப்பும், அதற்கிடையே வரும் மகள் சம்பந்தமான காட்சிகளும், நமக்கு லட்சுமி யார் என்பதை அடையாளம் காண்பித்துவிடுகிறது

(6 / 8)

அதன் பின்னர் திரைக்கதையை நீங்கள் எவ்வளவுதான் வளைத்து வளைத்து சுவாரசியமாக கொண்டு சென்றிருந்தாலும் கூட, கிளைமாக்ஸில் இப்படித்தான் ஏதோ நடக்கப்போகிறது என்ற முடிவை ஆடியன்ஸ் எளிதாக முன்னமே கணித்து விட்டார்கள். அங்கேயே படம் முடிந்து விட்டது.  வில்லன்களாக வரும் பாய்ஸ் மணிகண்டன், அனுராக் உள்ளிட்டோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். அபிராமி, மம்தா, திவ்யபாரதி ஆகிய அனைவருமே சும்மா வந்து போகிறார்கள். சிங்கம் புலியின் அபாராமான நடிப்பு படத்தின் பின்பகுதியின் பெரும் பலம்.   

(7 / 8)

நட்டி நட்ராஜ் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். லோம் நாத்தின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை நன்றாக கடத்தி இருக்கிறது. தினேஷின் கேமரா பல இடங்களில் காட்சியை யதார்த்தமாகவும், நிஜமாகவும் படம் பிடிக்க உதவி இருக்கிறது.  இறுதியில் மகள் வில்லனிடம் பேசும் காட்சியில், மகளின் தீரம் ஓகே என்றாலும்,  அந்த இடத்தின் அழுத்ததை இன்னும் வீரியமிக்க வசனங்களால் கட்டமைத்து இருக்கலாம். ஆக மகாராஜா படத்தில் நான் லீனியர் திரைக்கதை சுவாரசியம் கூட்டினாலும், ஏற்கனவே பார்த்து பழகி போன கதையாக அமைந்த காரணத்தால், விஜய்சேதுபதி எனும் கலைஞன் இங்கும் தோற்றே நிற்கின்றார். ஆகையால் இனிவரும் காலத்தில் நல்ல கதைகளை தேடாமல், புதிய கதை களத்தை தேடுங்கள் விஜய்..  

(8 / 8)

மற்ற கேலரிக்கள்