நம்மை நம்பி வருகிறவர்களை அரவணைச்சுத்தானே பழக்கம்.. விஜய் யார் பெயரையும் அழுத்தமாக சொல்லவே மாட்டேன்றாரா.. வெடித்த விஜய்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நம்மை நம்பி வருகிறவர்களை அரவணைச்சுத்தானே பழக்கம்.. விஜய் யார் பெயரையும் அழுத்தமாக சொல்லவே மாட்டேன்றாரா.. வெடித்த விஜய்

நம்மை நம்பி வருகிறவர்களை அரவணைச்சுத்தானே பழக்கம்.. விஜய் யார் பெயரையும் அழுத்தமாக சொல்லவே மாட்டேன்றாரா.. வெடித்த விஜய்

Oct 28, 2024 09:44 AM IST Marimuthu M
Oct 28, 2024 09:44 AM , IST

  • நம்மை நம்பி வருகிறவர்களை அரவணைச்சுத்தானே பழக்கம் என்றும், விஜய் யார் பெயரையும் அழுத்தமாக சொல்லவே மாட்டேன்றாரா என்பது குறித்தும் விளக்கமாய் விஜய் பேசியுள்ளார். 

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதியான நேற்று விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் செயல்திட்டங்கள் குறித்துப் பேசிய பேச்சு வைரல் ஆகியுள்ளது.மேடையில் த.வெ.க தலைவர் விஜய் பேசியதில், ‘’நம்மளோட செயல்திட்டங்களைத் தெளிவாகச் சொல்லிட்டோம். இருந்தாலும் அதில் மக்களுக்குத் தேவையான முக்கியமான ஹைலைட்ஸ் மட்டும் சொல்றேன். முக்கியமாக கவனம் செலுத்தவேண்டியது பெண்களுக்கும் வயதானவங்களுக்கும் குழந்தைகளுக்கும் உண்டான பாதுகாப்பில் தான். அதை உறுதி செய்றதுக்கே தனி இலாகாவும் துறையும் ஏற்படுத்தணும்’’.

(1 / 6)

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய செயல்திட்டங்கள்:‘’இன்னொரு முக்கியமான பாயின்ட். ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி, மருத்துவ வசதி, நல்ல குடிநீர் எல்லாத்தையும் எல்லாருக்கும் சமமாக கிடைக்கச்செய்யணும். அதற்குன்னு தனிக் கவனம் செலுத்தி, அதை அனைத்து மக்களோட உரிமைக்காகவும் மாத்தணும்.அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன்(முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும். அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும். அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும்''.

(2 / 6)

‘’அப்புறம் இன்னொரு முக்கியமான பாயின்ட். இது ஒரு அரசியல் அணுகுண்டு. மக்களோட மக்களாக நாம் தொடர்ந்து நிற்கப்போகிறோம். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடுகளிலும் உயிராக, உணர்வாக இருக்கிறோம். அதனால், அவர்களோட ஆசீர்வாதத்தாலும் அமோக ஆதரவாலும் நம்மை சிங்கிள் மெஜாரிட்டியோட ஜெயிக்கவைப்பாங்கன்ற அசைக்கமுடியாத நம்பிக்கை, ஆழமான நம்பிக்கை நூறு விழுக்காடு இருக்கு''

(3 / 6)

‘’இருந்தாலும், அப்படி நாம் அந்த நிலையை நிறைவாக அடைந்தாலும், நம்மளோட சிலபேர் வரலாம் இல்லையா. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா. அப்படி வரவங்கலையும் அன்போடு அரவணைக்கணும் இல்லையா. எப்போதுமே நம்மை நம்பி வருகிறவர்களை அரவணைச்சுத்தானே பழக்கம். அதனால் நம்மோடு களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்புத் தந்து, அதிகாரப்பகிர்வு செய்யப்படும்''.

(4 / 6)

பயம் கிடையாது - விஜய்:‘’2026ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தில் புத்தாண்டு. நம்பிக்கையாக இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். என்னடா இந்த விஜய் யார் பெயரையுமே சொல்லவே மாட்டேன்றான். யார் பெயரையும் அழுத்தமாக சொல்லவே மாட்டேன்றான். இவனுக்கு என்ன பயமா?. அப்படி இப்படின்னு ஒரு சில அரசியல் விஞ்ஞானிகள், நக்கல்-நையாண்டிகள் நடக்கும் இல்லையா. அவங்க எல்லோருக்குமே நான் சொல்லிக்கிறது என்னவென்றால், சில பேருடைய பெயர் எல்லாம் சொல்லாமல் விட்டதற்குக் காரணம், சொல்லமுடியாதுங்கிறது அப்படியெல்லாம் கிடையாது. சொல்ல தில் இல்லை அப்படியெல்லாம் கிடையாது. இங்கே யார் பெயரையும் சொல்லி தாக்குறதுக்கு எல்லாம் நாங்க இங்கே வரல. தாக்கிப்பேசுறது, மரியாதை இல்லாமல் பேசுறது, தரக்குறைவாக தகாத வார்த்தைகளில் பேசுறது அதுக்கெல்லாம் நாங்க இங்கே வரவே இல்லை''.

(5 / 6)

‘’மக்கள் மத்தியில் ஒரு நல்லபெயர் எடுத்து ஒரு டீசன்ட்டான அரசியல் செய்றதுக்குத் தான் நாங்க இங்கே வந்திருக்கோம். அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, கொள்கை எதிரியாக இருந்தாலும் சரி.. டீசன்ட் அப்ரோச்.. டீசன்ட் அட்டாக். ஆனால், இப்போது அது டீப் ஆக இருக்கும் அப்படிங்கிறதை மட்டும் நாங்க இப்ப சொல்லிக்கிறோம்''எனப்பேசினார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்