25 years of kadalukku mariyathai:வெள்ளி விழா கண்ட 90s காதலர்களின் காவியம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  25 Years Of Kadalukku Mariyathai:வெள்ளி விழா கண்ட 90s காதலர்களின் காவியம்

25 years of kadalukku mariyathai:வெள்ளி விழா கண்ட 90s காதலர்களின் காவியம்

Dec 20, 2022 11:17 AM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 20, 2022 11:17 AM , IST

  • 90s காதலர்களின் காவியமாக திகழ்ந்த காதலுக்கு மரியாதை வெளியாகி இன்றுடன் வெள்ளி விழா ஆண்டு ஆகியுள்ளது. பல்வேறு காதலர்களுக்கு பச்சை கொடியாக இருந்து காதல் மீது மரியாதையை உணர வைத்தது ஜீவா - மினி காதல்.

மலையாளத்தில் வெளியான அனியத்திபரவு படத்தின் ரீமேக்காக விஜய் - ஷாலினி நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டான படம் காதலுக்கு மரியாதை. மலையாளத்தில் ஷாலினி நடித்த மினி என்கிற அதே கதாபாத்திரத்தில் ஷாலினி தமிழில் நடித்திருந்தார்

(1 / 12)

முதலில் இந்தப் படத்தில் அப்பாஸ் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் குளறுபடியால் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் ஷாலினிக்கு பதில் அறிமுக ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க பாசில் முடிவு செய்த நிலையில், பின்னர் அவரையே தமிழிலும் நடிக்க வைத்தார். பின்னாள் இந்த ரீல் ஜோடி 90ஸ் காதலர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறிய கதையை அனைவரும் அறிவார்கள்

(2 / 12)

1997ஆம் ஆண்டு விஜக்கும் சக்சஸ் புல் ஆண்டாகவே அமைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் வெளியான லவ் டுடே, அப்புறம் நேருக்கு நேர் ஹிட்டடிக்க, ஆண்டின் கடைசியாக வெளிவந்த காதலுக்கு மரியாதை விஜய்யின் பக்கத்து வீட்டு பையன் போன்று தமிழக மக்களின் மனங்களில் குடிபெயர வைத்தது 

(3 / 12)

காதலை சுற்றியே வந்த 90களின் இறுதிகட்ட கால திரைப்படங்களில் காதல், குடும்ப உறவு என மெலோ ட்ராமா பாணியில் புதுமையாக வந்திருந்த இந்தப் படம் ப்ரஷ்ஷாக அமைந்திருந்ததோடு, வழக்கமான க்ளிசே காதல் பாடங்களிலிருந்து விலகி புது விதமாக பாதையை தமிழ் சினிமாவுக்கு வகுத்து கொடுத்தது  

(4 / 12)

காதலுக்கு மரியாதை படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது. அதேபோல் படத்தின் பாடலாசிரியர் பழநிபாரதியும் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்றார்

(5 / 12)

இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் ஒவ்வொரு ரகம். ஆனந்த குயிலின் பாட்டு என குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்வதாகட்டும், ஓ பேபி பேபி என துள்ளல் இசையுடன் விஜய் நிகழ்த்திய டான்ஸ் மேஜிக் ஆகட்டும், என்னை தாலாட்டா வருவாளா, ஒரு பட்டாம்பூச்சி என காதல் ரசம் சொட்டும் மெலடியாகட்டும், ஐயா வீடு தொறந்துதான் கிடக்கு என குத்து பாடலாகட்டும், அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் ஒலிக்காத நாளில்லை. ஸ்மார்ட் உலகத்துக்கு முன்பு ஒளியும் ஒலியும் காலத்தில் தொடர்ச்சியாக சில வாரங்கள் ஒலிக்கப்பட்ட பாடலாக இவை இருந்தன 

(6 / 12)

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஓ பேபி பேபி பாடலை விஜய் பாடியிருப்பார். இளையராஜா இசையில் விஜய் பாடிய ஒரே பாடலாக இது அமைந்துள்ளது

(7 / 12)

ஓ பேபி பேபி பாடலின் ப்ரீலூடில் விஜய் - ஷாலினி எண்ண ஓட்டத்தை காட்டும் விதமாக Love & Love only என்ற புத்தகத்தை இருவரும் ஒரே நேரத்தில் எடுப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஐகானிக் காட்சியான இது தமிழ் சினிமாவின் முதல் முழு நீள ஸ்ஃபூப் படமான தமிழ்ப்படம் என்ற படத்தின் பகடி செய்து காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு காட்சிகளுமே ரசிகர்களை மகிழ்வித்த காட்சிகளாகவே அமைந்தன

(8 / 12)

திரைப்பட பாடல்களை பிரிண்ட் செய்து புத்தகமாக வெளியிட்ட அந்த காலகட்டத்தில் அனைவராலும் விரும்பி வாங்கிய  வாங்கப்பட்ட பாடல் புத்தகமாக இந்த பட பாடல் புத்தகம் அமைந்தது. அப்போது காதலில் இருந்தவர்கள், இந்தப் படத்துக்கு பின்னர் தங்களை ஜீவா - மினியாகவே பாவித்து கொண்டு காதல் செய்ததை இந்த வெள்ளிவிழா ஆண்டில் நினைத்துபார்த்தால் இப்போதும் கண்களிலும், மனதிலும் வெட்கம் வந்து போவதை உணருவார்கள் 

(9 / 12)

இந்த நூற்றாண்டு காதலர்களின் அடையாளமாக இருப்பவர் கார்த்திக் - ஜெஸ்ஸி என்றால், கடந்த நூற்றாண்டின் இறுதி காதல் வயப்பட்டவர்களின் அடையாளமாக இருந்தார்கள் ஜீவாவும், மினியும்தான். பல்வேறு காதலர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு காரணமாக அமைந்திருந்தது இந்தப் படம்

(10 / 12)

தமிழை தொடர்ந்து இந்தியிலும் இந்தப் படம் அக்‌ஷய் கன்னா - ஜோதிகா நடிப்பில் டோலி சஜா கே ரஹ்னா என்ற பெயரில் வெளியானது. தமிழை போல் இந்தியிலும் மேஜிக்கை நிகழ்த்தியது

(11 / 12)

தமிழ் சினிமா ரசிகர்களை காதல் ரசம் சொட்ட வைத்த காதலுக்கு மரியாதை வெளியான அதே நாளில்தான் உலக அளவில் காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்திருந்த டைட்டானிக் திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் தற்போது வெள்ளி விழாவை அடைந்துள்ளன 

(12 / 12)

மற்ற கேலரிக்கள்