‘கட்டாயப்படுத்தி வெற்றிய பணிய வைக்க முடியாது.. அவ்வளவு சொல்லியும் சிகரெட்ட பத்த வச்சார்..’ - ஆர்த்தி் வெற்றிமாறன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘கட்டாயப்படுத்தி வெற்றிய பணிய வைக்க முடியாது.. அவ்வளவு சொல்லியும் சிகரெட்ட பத்த வச்சார்..’ - ஆர்த்தி் வெற்றிமாறன்!

‘கட்டாயப்படுத்தி வெற்றிய பணிய வைக்க முடியாது.. அவ்வளவு சொல்லியும் சிகரெட்ட பத்த வச்சார்..’ - ஆர்த்தி் வெற்றிமாறன்!

Dec 19, 2024 05:11 PM IST Kalyani Pandiyan S
Dec 19, 2024 05:11 PM , IST

அவர் ஓடிச் சென்று ஒரு சிகரெட்டை வாங்கி வந்து பிடிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரை நாம் ஏதாவது ஒரு விஷயம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினால் அவர் கேட்க மாட்டார்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை வெற்றிமாறன் விட்ட கதையை பார்க்கலாம்.  “அவரது வாழ்க்கையில் அவர் எடுத்த மிகவும் கஷ்டமான முடிவு என்றால், அது அவரிடம் இருந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டது. அது 2003 காலகட்டம். என்னிடம் ஒரு நாள் நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னார். உடனே நாங்கள் அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆஞ்சியோ செய்து பார்த்தோம். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள், அந்த மருத்துவமனையிலேயே அவர் இருந்தார். அப்பொது மருத்துவர்கள் இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக விட வேண்டும் என்று அவரிடம் சொன்னார்கள்.  இதனையடுத்து நான் அவரை விருகம்பாக்கத்தில் இருந்த வீட்டிற்கு காரில் அழைத்து வந்து கொண்டிருந்தேன். திடீரென்று அவர் காரை நிறுத்து நிறுத்து என்று சொன்னார். நான் வண்டியை நிறுத்தினேன்.   

(1 / 6)

அவர் ஓடிச் சென்று ஒரு சிகரெட்டை வாங்கி வந்து பிடிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரை நாம் ஏதாவது ஒரு விஷயம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினால் அவர் கேட்க மாட்டார். நானும் நீ சிகரெட் பிடித்தால் நான் உன்னிடம் பேசமாட்டேன் போன்ற வேலைகளை எல்லாம் செய்ய மாட்டேன். காரணம் அது எல்லாம் அவரிடம் வேலைக்கு ஆகாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.    

(2 / 6)

ஆனால் அது குறித்து நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பேன். ஒரு கட்டத்தில் அவரே ஒன்றை புரிந்து கொண்டார். 

(3 / 6)

அது என்னவென்றால் நாம் நன்றாக இல்லை என்றால், நமது கனவுகளை நம்மால் அடைய முடியாது என்பது. அதை அவர் அழுத்தமாக புரிந்து கொண்டார். நமக்கு மிகப்பெரிய கனவு இருக்கிறது அதை அடைவதற்கு குறைந்தபட்சமாக நமது உடலானது மிக மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அவரது மனதில் ஆழமாக வேறுன்றி விட்டது.    

(4 / 6)

அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு பல படங்கள் அவருக்கு உத்வேகம் அளித்தது. இதனையடுத்துதான் அவர் சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். 

(5 / 6)

புகை பிடிப்பதை விட்டதற்குப் பின்னர் ஒவ்வொரு நாளையுமே ஒரு எண்ணிக்கொண்டே இருப்பார் ஒவ்வொரு வருடமும் கழிந்த பின்னர், நான் புகைபிடித்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று மிகவும் ஆசுவாசமாகச் சொல்வார். அவர் புகை பிடிக்காத காரணத்தினால் அவரது அலுவலகத்திலும் யாரும் புகை பிடிக்கக் கூடாது என்பதை கட்டாயமாக சொல்லிவிட்டார்.” என்று பேசினார்.நன்றி : எஸ்.எஸ்.மியூசிக்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்