Vastu Tips: வீட்டின் மாடிப்படிகள் எப்படி அமைய வேண்டும்?.. வாஸ்து விதிகள் சொல்வது என்ன? - விபரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vastu Tips: வீட்டின் மாடிப்படிகள் எப்படி அமைய வேண்டும்?.. வாஸ்து விதிகள் சொல்வது என்ன? - விபரம் இதோ..!

Vastu Tips: வீட்டின் மாடிப்படிகள் எப்படி அமைய வேண்டும்?.. வாஸ்து விதிகள் சொல்வது என்ன? - விபரம் இதோ..!

Jul 19, 2024 08:05 PM IST Karthikeyan S
Jul 19, 2024 08:05 PM , IST

  • Vastu Tips: வீட்டின் உள்ளே படிக்கட்டுகள் எந்த திசையில் அமைய வேண்டும் என்பதை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை பற்றி பார்ப்போம்.

படிக்கட்டுகள் அல்லது அதன் கைப்பிடிச் சுவர் இடிந்திருந்தாலோ, அவற்றில் விரிசல்கள் இருப்பது போன்ற குறைகளை கண்டறிந்தால் அதை உடனடியாக கவனித்து சரி செய்வது அவசியம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(1 / 7)

மாடிப்படிகளில் ஏறிச்செல்லும் முறை கடிகார சுற்று அமைப்பில் இருக்க வேண்டும். ஏறுபவர் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கியோ மேலே செல்வது போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.

(2 / 7)

அதற்கு மாறாக இருந்தால் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் படியின் இரு புறங்களிலும் உயிரோட்டமுள்ள மலர்கள் கொண்ட பிளவர் வாஸ் வைக்க வேண்டும்.

(3 / 7)

வீட்டின் ஈசானிய திசையில் மாடிப்படிகள் அமைந்திருந்தால் முதல் படிக்கட்டின் இரண்டு  புறமும் செம்பு பாத்திர பிளவர் வாஸ் அல்லது தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து அதில் வாசமுள்ள மலர்களை போட்டு வைக்கலாம். 

(4 / 7)

வீட்டின் உள்ளே அமைந்துள்ள மாடிப்படிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கப்படாமல், வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு இருக்கலாம்.

(5 / 7)

அப்படிப்பட்ட சூழலில் படிகளின் எண்ணிக்கையை 11, 13, 15, 17, 19, 21 என்ற ஒற்றைப்படை எண்களில் அமையும்படி சிறிய மாற்றம் செய்து கொள்ளலாம்.

(6 / 7)

பூஜையறை, சமையலறையை ஒட்டியவாறு படிக்கட்டுகள் இருந்தால் அவற்றுக்கு அடர்த்தியான வண்ணங்களில் பெயிண்டிங் செய்வது கூடாது. மாறாக, வெளிர் நிற பெயிண்டிங் செய்ய வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்