Money Luck: நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் வழிகள் - பர்சில் எதையெல்லாம் வைக்க வேண்டும், வைக்ககூடாது!
Vastu Shastra: பணம் வைப்பதில் சில நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் பர்சில் பணம் நிலைத்து இருக்காது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. எனவே பர்ஸ்களில் பணம் வைப்பதில் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்
(1 / 6)
(2 / 6)
பில்கள்: பல நேரங்களில் பழைய பில் அல்லது அது தொடர்பான காகிதங்கள் பர்சில் வைக்கப்படுகிறது. அவை சில சமயங்களில் கசங்கியும் விடுகின்றன. வாஸ்துபடி இதுபோன்ற காகிதங்களை உங்கள் பர்சில் ஒருபோதும் சுருட்டியும் கசக்கியும் வைத்திருக்க வேண்டாம். உங்கள் உழைப்பின் நிழலாக இருக்கும் அதை கசக்கவிடக்கூடாது
(3 / 6)
தெய்வம் அல்லது தனிப்பட்ட நபரின் புகைப்படம் வைத்திருப்பது: பர்ஸ்களில் பணம் தவிர கடவுள் அல்லது விரும்பிய நபரின் புகைப்படங்களை வைப்பது சிலரது பழக்கமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக இறந்தவரின் புகைப்படத்தை பர்சில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் உயிருள்ள ஒருவரின் படத்தையும், தெய்வத்தின் படத்தை பர்ஸில் வைத்திருப்பது நல்லதல்ல என வாஸ்துவில் கூறப்படுகிறது
(4 / 6)
பணத்தை எப்படி வைக்க கூடாது: பர்சில் வைக்கும் பணத்தை மடித்தோ அல்லது நொறுங்கிய, கசங்கிய நிலையிலோ வைக்க கூடாது என கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து செய்தால் நிதி நெருக்கடி ஏற்படும் என சொல்லப்படுகிறது. அதேபோல் பணத்தையும், நாணயத்தையும் தனித்தனியாக வைக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது
(5 / 6)
சாவிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சாவிகளை பர்சில் வைப்பது உங்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது
மற்ற கேலரிக்கள்