Jackfruit Recipe: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் இத்தனை வெரைட்டி டிஷ்களை செய்யலாமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackfruit Recipe: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் இத்தனை வெரைட்டி டிஷ்களை செய்யலாமா?

Jackfruit Recipe: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் இத்தனை வெரைட்டி டிஷ்களை செய்யலாமா?

Jan 08, 2024 04:04 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 04:04 PM , IST

  • முக்கனிகளில் ஒன்றாக இருந்து வரும் பலாப்பழத்தை வைத்து ஐஸ்க்ரீம், பர்கர், கேக் போன்ற பல்வேறு டிஷ்கள் கர்நாடகா மாநிலம் புட்டுரில் நடைபெற்ற பலாப்பழ கண்காட்சியில் இடம்பிடித்துள்ளன. பலாப்பழங்களில் இத்தனை வகையான டிஷ்கள் செய்யலாமா என பார்ப்பவர்களை ஆச்சர்யபடுத்தியது.

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக பலாபழம் உள்ளது. பலாபழத்தை வைத்து பல்வேறு பாரம்பரிய வகை உணவுகளை சமைத்து சாப்பிடும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இதே பலாப்பழத்தை வைத்து ஐஸ்க்ரீம், பர்கர் உள்ளிட்ட சில பாஸ்ட் புஃட் உணவுகளையும் தயார் செய்யலாம்

(1 / 8)

ஜங்க் புட்டாக இருந்து வரும் பர்கர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படும் நிலையில், உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தை வைத்து பர்கர் தயார் செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான பர்கர் போன்றே பன்களுக்கு இடையில் வைத்தே இதை சாப்பிடலாம். இதன் இயற்கையான இனிப்பு சுவை கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்தமான டிஷ்ஷாக மாற்றக்கூடும்

(2 / 8)

கர்நாடக கடலோர பகுதிகளில் பலாபழத்தை வைத்து இட்லி, தோசை போன்ற உணவுகள் சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது பலாபழத்தை வைத்து சுவை மிகுந்து ரொட்டி தயார் செய்து காட்சிபடுத்தியிருந்தனர்

(3 / 8)

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான தோல்கா, பலாபழத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது

(4 / 8)

சிக்கன், மட்டன் பிரியாணி ருசித்து சலித்து போனவர்களுக்காக இனிப்பும், காரமும் ஒருங்கிணைந்த பலாபழ பிரியாணி. சைவ பிரியர்களுக்கான மற்றொரு சாய்சாக இந்த பிரியாணி உள்ளது

(5 / 8)

அனைவரும் விரும்பி சாப்பிடும் கப் கேக், பலாபழத்தில் வைத்து கொழு கொழு க்ரீம் சகிதமாக தயார் செய்துள்ளார்கள் 

(6 / 8)

பொதுவாக பலாபழத்தை வைத்து ஜூஸ் தயார் செய்வதை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பலாபழத்தை பாலுடன் சேர்ந்து நன்கு பிளெண்ட் செய்து பலாபழ ஷேக்காக உடலுக்கும், மனதுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாக பருகும் விதமாக தயார் செய்துள்ளார்கள்

(7 / 8)

அண்ணாச்சி பழம் பாயசம், இளநீர் பாயசம் வரிசையில் தித்திக்கும் சுவை கொண்ட பலாபழ பாயாசம்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்