வடக்குப்பட்டி ராமசாமி முதல் சைரன் வரை.. பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்கள் - ஓர் பார்வை!
- February Release Movies: அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட் உங்களுக்காக இதோ..!
- February Release Movies: அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட் உங்களுக்காக இதோ..!
(2 / 6)
சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் வரும் பிப். 2-ம் தேதி வெளியாகிறது.
(3 / 6)
'சவரக்கத்தி' படத்தின் இயக்குனா் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்' திரைப்படமும் வரும் பிப்.2 -ம் தேதி ரிலீஸாகிறது. இதில், விதார்த், பூர்ணா, ஆதிக் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
(4 / 6)
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள படம் 'லவ்வர்'(Lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 09 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
(5 / 6)
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி வெளியாகிறது.
மற்ற கேலரிக்கள்