Hamsa Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ’அனைத்தையும் தந்து ஆட்டிப்படைக்க வைக்கும் ஹம்ச யோகம் யாருக்கு?’
- Hamsa Yogam: தனி ஒரு கிரகமாக அனைத்தையும் சீர்தூக்கி சிறப்பை தரும் கிரகமாக குரு உள்ளார். பிற யோகங்களை பொறுத்தவரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இருக்கும். ஆனால் முழு சுபர் ஆன குரு பகவான் தரும் ஹம்ச யோகத்திற்கு யாருடைய தயவும் தேவை இல்லை.
- Hamsa Yogam: தனி ஒரு கிரகமாக அனைத்தையும் சீர்தூக்கி சிறப்பை தரும் கிரகமாக குரு உள்ளார். பிற யோகங்களை பொறுத்தவரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இருக்கும். ஆனால் முழு சுபர் ஆன குரு பகவான் தரும் ஹம்ச யோகத்திற்கு யாருடைய தயவும் தேவை இல்லை.
(1 / 8)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம், சேர்க்கை உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் உண்டாகும் ஒரு யோகங்களில் ஒன்றாக ஹம்ச யோகம் குறிப்பிடப்படுகின்றது.
(2 / 8)
தனி ஒரு கிரகமாக அனைத்தையும் சீர்தூக்கி சிறப்பை தரும் கிரகமாக குரு பகவான் உள்ளார். பிற யோகங்களை பொறுத்தவரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இருக்கும். ஆனால் முழு சுபர் ஆன குரு பகவான் தரும் ஹம்ச யோகத்திற்கு யாருடைய தயவும் தேவை இல்லை.
(3 / 8)
உபய லக்னங்கள் என சொல்லக்கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னங்களுக்கு கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தந்தாலும், அதையும் தாண்டி பல நன்மைகளை செய்யும் கிரகமாக குரு பகவான் உள்ளார்.
(4 / 8)
குரு பகவான் ஆட்சி, உச்சம், மூலத் திரிக்கோணம் பெற்ற வீடுகள் உங்களுக்கு லக்ன கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் இருக்க வேண்டும் என்பது இந்த யோகத்தின் முக்கிய விதியாக உள்ளது.
(5 / 8)
குறிப்பாக சர லக்னங்களில் முதல் தர ஹம்ச யோகம் ஏற்படும். குறிப்பாக மேஷம் மற்றும் கடக லக்னங்களுக்கு 100 சதவீதத்திற்கு மேல் ஹம்ச யோகம் பலன் அளிக்கும். துலாம் மற்றும் மகரம் லக்னங்களுக்கு கேந்திரத்தில் வலுப்பெற்று நன்மைகளை இந்த யோகம் தரும். ஸ்திர லக்னங்கள் என்று சொல்லக்கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு முழுமையான ஹம்ச யோக பலன்கள் கிடைப்பது கிடையாது.
(6 / 8)
துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் எதிரியாக இருந்தாலும், முழுக்க முழுக்க உபஜெய ஸ்தானங்களில் வலுப்பெறுவதால் 3, 6, 10ஆம் இடங்கள் உபஜெய ஸ்தானங்களாக விளங்குகிறது.
(7 / 8)
மகர லக்னத்திற்கு 3 மற்றும் 12ஆம் இடங்களுக்கு உரியவராக குரு உள்ளார். 7ஆம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்ற நிலையில் லக்னத்தோடு தொடர்பு கொண்டு ஹம்ச யோகத்தை குரு பகவான் உண்டாக்குவார்.
மற்ற கேலரிக்கள்