Aishwarya Arjun: ஹனுமன் ஆசீர்வாதம்.. அர்ஜூன் மகளை கரம் பிடித்தார் உமாபதி..புகைப்படங்கள் வைரல்!
Aishwarya Arjun: பிரபல நடிகர் அர்ஜூன் மகளான ஐஸ்வர்யாவை உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்டிருக்கிறார் - புகைப்படங்கள் வைரல்
(1 / 5)
உமாபதி, ஐஸ்வர்யா ஆகியோர் முறையே ஹீரோ, ஹீரோயின்களாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்கள்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி டிவி ஷோவில் போட்டியாளராக உமாபதி ராமையா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில்தான் ஐஸ்வர்யா அர்ஜுன், உமாபதி இடையே அறிமுகம் ஆகியுள்ளது. பின்னர் இவர்களுக்குள் நட்பாகி, காதல் பூத்த நிலையில் தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யாவின் தந்தையும், நடிகருமான அர்ஜுன் தான் தொகுப்பாளராக இருந்தார்.
(2 / 5)
ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத போதிலும், உமாபதியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் தற்போது கோலிவுட் சினிமாவின் அடுத்த ஸ்டார் ஜோடிகளாகியுள்ளனர்.
(3 / 5)
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது.
மற்ற கேலரிக்கள்