பஞ்சமில்லாமல் அரசியல் பஞ்ச் பேசிய விஜய்.. என்னென்ன சொல்லி இருக்கார் பாருங்க!
- நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இன்று தொடங்கி நடத்தவுள்ள நிலையில், இதுவரை அவர் திரைப்படங்களின் மூலம் பேசிய அரசியல் வசனங்களைப் பார்க்கலாம்.
- நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இன்று தொடங்கி நடத்தவுள்ள நிலையில், இதுவரை அவர் திரைப்படங்களின் மூலம் பேசிய அரசியல் வசனங்களைப் பார்க்கலாம்.
(1 / 13)
அன்றாடத் தேவைகளுக்காக மக்கள் மார்க்கெட்டிற்கு போயிட்டு வர்ற மாதிரி, இனி உரிமைகளுக்காக நீதிமன்றம் தேடி வர்ற காலம் வரணும் என தமிழன் திரைப்படத்தில் மக்களின் தேவைகளுக்காக குரல் கொடுத்திருப்பார் விஜய்.
(2 / 13)
எதிரியை வாழ விட்டு அவன் முன்னாடி வாழ்ந்து காட்டுவது தான் எனக்கு பிடிக்கும் என பகவதி படத்தில் பஞ்ச் சொல்லி தான் யார் என்பதை கூறியிருப்பார் விஜய்.
(3 / 13)
புதிய கீதை படத்தில், மக்களின் தேவைக்காக குரல் கொடுத்த விஜய் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் நான் நானாகவே இருப்பேன் என வசனம் பேசி இருப்பார்.
(4 / 13)
திருமலை படத்தில் முடிவு பண்ணி இறங்கிட்டா பீல் பண்ண மாட்டேன். பேக்கும் அடிக்க மாட்டேன். ஒன்ஸ் பிக் அப் ஆனா ஆனது தான். போயிட்டே இருப்பேன் என அவருடைய முடிவு எவ்வளவு தீர்க்கமானது என பேசியிருப்பார்.
(5 / 13)
கில்லி படத்தில் கபடி வீரராக வரும் விஜய், இந்த ஏரியா அந்த ஏரியா, அந்த இடம் இந்த இடம், எனக்கு எங்கயுமே பயம் கிடையாது. ஏன்னா ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லிடா என தன் ரசிகர் பலம் குறித்து பேசியிருப்பார்.
(6 / 13)
போக்கிரி படத்தில் அண்டர் கவர் போலீஸாக இருக்கும் விஜய், ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என தான் முடிவெடுக்கும் முறை குறித்து பேசி இருப்பார்.
(7 / 13)
துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய ஐ அம் வெயிட்டிங் வசனம், எந்த இக்கட்டான சூழ்நிலைக்கும் காத்திருப்பதாக அவர் கூறுவது போல விஜய்யின் ரசிகர்கள் சிலாகித்து வந்தனர்.
(8 / 13)
தலைவா படத்தின் தலைப்பில் டைம் டு லீட் என இடம்பெற்ற வசனம் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல பிரச்சனைகளை சந்தித்தார் விஜய்
(9 / 13)
கத்தி திரைப்படத்தில், மக்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டும் என்ற முறையில் அவர், நம்ம பசி தீர்ந்ததற்கு அப்புறம் சாப்பிடும் அடுத்த இட்லி இன்னொருவருடையது என பேசி இருப்பார்.
(10 / 13)
பைரவா படத்தில், அரசியல்வாதிக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க களத்தில் இறங்கிய விஜய், தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குத் தான் அள்ளு அதிகமாக இருக்கணும் எனவும், இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்னு என்கிட்ட இருக்குது.. அது சொன்ன வாக்கை காப்பாற்றுவது எனக் கூறி நேரடி அரசியல் வசனங்களை பேசி இருப்பார்.
(11 / 13)
சர்க்கார் திரைப்படத்தில், ஒருபடி மேலே சென்று அவர் தேர்தல் அரசியலில் குதித்திருப்பார். அத்துடன் அந்தப் படத்தில் பிராண்டை அழிக்கிறதுல தான்டா நான் ஸ்பெஷலிஸ்ட் என பேசி தமிழ்நாட்டு அரசியலில் கலவரத்தை தூண்டி இருப்பார்.
(12 / 13)
மாஸ்டர் படத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஆசிரியராக சென்ற விஜய், என்னை பிடிச்சவன் கோடி பேர் இருக்காண்டா வெளியில என பேசி அவரின் ரசிகர்கள் ஆதரவைப் பெற்றிருப்பார்.
மற்ற கேலரிக்கள்