Trigrahi Yoga: ஹோலிக்கு முன் சேரும் சூரியன், புதன், ராகு: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய 4 ராசிகள்!
Trigrahi Yoga:மார்ச் 2024ல் ஒரு ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு நடக்கப் போகிறது. அது திரிகிரகி யோகம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே ராசியில் மூன்று கிரகங்கள் சஞ்சரிப்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தில் எந்த ராசிக்காரர்கள் தங்கள் தலையெழுத்தை மாற்றப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
(1 / 6)
Trigrahi Yoga: மீனத்தில் சூரியன், புதன், ராகு மூன்றுகிரகங்களும் சஞ்சரிப்பதால், ஹோலிப் பண்டிகைக்கு முன், மீனராசியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். மார்ச் 14அன்று, சூரியன் மீன ராசியில் சஞ்சரித்துள்ளார். மீன ராசியில் 30 அக்டோபர் 2023 முதல் ராகு கிரகம் சஞ்சரித்து வருகிறது. மீனராசியில் மார்ச் 7 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை சூரியன் இந்த ராசியில் இருப்பார். இந்த கிரகங்களின் இயக்கம் 4 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த 4 ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
(2 / 6)
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் படிப்பில் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், நீங்கள் எந்த முக்கியமான முடிவையும் எடுப்பது கடினமாக இருக்கலாம். உங்கள் இயல்பு பொதுமக்களுக்குப் பிடிக்காது.
(3 / 6)
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கினால், அது தடைபடலாம். உங்கள் இலக்கை அடைய நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.(Freepik)
(4 / 6)
கன்னி: இந்த ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் சில பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் சமநிலையைப் பரமாரிக்கவும். உங்கள் கூச்ச சுபாவம் உங்களை பல விஷயங்களில் சிக்க வைக்கும். பல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.(Freepik)
(5 / 6)
மீனம்: இந்த நேரத்தில் மீன ராசியின் குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், மீன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான சமநிலையைப் பராமரிப்பதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காதல் உறவுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பிரேக்அப் போன்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.(Freepik)
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்