Top 10 Parenting Tips : குழந்தைகள் செய்யும் இந்த 10 தவறுகள் பெற்றோர்களின் மனதை காயப்படுத்தும்! அவை என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top 10 Parenting Tips : குழந்தைகள் செய்யும் இந்த 10 தவறுகள் பெற்றோர்களின் மனதை காயப்படுத்தும்! அவை என்ன தெரியுமா?

Top 10 Parenting Tips : குழந்தைகள் செய்யும் இந்த 10 தவறுகள் பெற்றோர்களின் மனதை காயப்படுத்தும்! அவை என்ன தெரியுமா?

Aug 17, 2024 02:06 PM IST Priyadarshini R
Aug 17, 2024 02:06 PM , IST

  • Top 10 Parenting Tips : குழந்தைகள் செய்யும் இந்த 10 தவறுகள் பெற்றோர்களின் மனதை காயப்படுத்தும்! அவை என்ன தெரியுமா?

அவமதிக்கும் செயல்கள் - குழந்தைகள் முரட்டுத்தனத்துடனும், நிராகரிக்கும் மனதுடனும் அவர்களின் பெற்றோரிடத்தில் பேசினால், அது பெற்றோருக்கு உண்மையிலேயே வலியைக் கொடுக்கும். மரியாதையின்றி பேசினால், பின்னால் பேசினால், பெற்றோரின் அறிவுரைகளை மறுத்தால், கடுமையான வார்த்தைகளை பேசினால் பெற்றோருக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்நாளின் பாதியைக் கழிக்கிறார்கள். இதுபோல் குழந்தைகள் அவர்களை அவமதித்தால், அவர்களின் அன்பு மற்றும் முயற்சிகளை இந்த நிராகரிப்பு வருத்தமடையச் செய்யும்.

(1 / 10)

வளரிளம் பருவத்தில் விலகல் - உங்கள் குழந்தைகளுக்கு வயதாக ஆக, அவர்கள் தங்களின் வாழ்க்கையை தாங்களே முடிவு செய்துகொள்கிறார்கள். அவர்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிப்பது இயற்கையான ஒன்றுதான். எனினும், வளர்ந்த குழந்தைகள் தங்களை உடல் மற்றும் உணர்வு ரீதியாக தங்கள் பெற்றோரிடம் இருந்து விலகிவிடுகிறார்கள். குழந்தைகளில் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பெற்றோர்தான். அவர்களின் குழந்தைகள் விலகியதும் தனித்து விடப்பட்டதாக உணர்வார்கள்.

(2 / 10)

பெற்றோரின் அறிவுரைக்கு காது கொடுக்காமல் இருப்பது - பெற்றோர் அடிக்கடி தனது குழந்தைகளுக்கு அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இது குழந்தைகளின் நல்வாழ்வுக்கு மிகவும் தேவை என்பதாலும், அவர்கள் மீது கொண்ட உண்மையான அக்கறையாலும் ஆகும். தொடர்ந்து, குழந்தைகள் தவிர்க்கப்பட்டாலோ அல்லது இந்த அறிவுரைகளை கேட்காவிட்டாலோ, இது பெற்றோருக்கு மரியாதை குறைவான செயல்பாடாகும். அவர்களை பாராட்டப்படாததைப்போல் உணர்வார்கள். இது அவர்களுக்கு உதவியின்மை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெற்றோர், தங்கள் குழந்தைகள் தவிர்க்கக் கூடிய தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

(3 / 10)

பெற்றோரை சாதாரணமாக எடுத்துக்கொள்வது - சில குழந்தைகள் தங்கள் பெற்றோர் எப்போதும் தங்களுடன் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களின் தியாகங்களை உணராமல், அவர்களின் முயற்சிகளை உணராமல் நடந்துகொள்ளும்போது, பெற்றோர் வருத்தப்படுகிறார்கள். உணர்வு ரீதியான ஆதரவு, பொருளாதார ரீதியான ஆதரவு அல்லது உதவி என ஒவ்வொரு செயலிலும் பெற்றோரை சாதாரணமாக எடுத்துக்கொள்வது அவர்களுக்கு வருத்தத்தையும், மனகசப்பையும் ஏற்படுத்தும்.

(4 / 10)

திறந்த உரையாடல் இல்லாமல் போவது - பெற்றோரின் வலிக்கு மற்றுமொரு காரணமாக இருப்பது உரையாடல் குறைவதும் ஆகும். குழந்தைகள் அவர்களின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் கஷ்டங்களை அவர்களுக்குள்ளே வைத்துக்கொள்ளும்போது, பெற்றோர் தங்களின் வாழ்க்கையில் விரக்தியை உணரவைக்கிறது.உணர்வு ரீதியிலான விலகல், பெற்றோரின் உறவை பிரிவை ஏற்படுத்துகிறது. பெற்றோர் தொடர்பு இல்லாமல் இருப்பது போன்ற உணர்வைத்தருகிறது. இதனால் குழந்தைகளின் நலன் குறித்து வருத்தப்படுகிறார்கள்.

(5 / 10)

பெற்றோரை மற்றவர்களுடன் ஒப்பிடுதல் - குழந்தைகள், தங்கள் பெற்றோரை மற்ற பெற்றோருடன் ஒப்பிடுவது, பெற்றோருக்கு பிடிக்காத ஒன்றாக உள்ளது. அவர்கள் பேரன்டிங் ஸ்டைலை குறைகூறுவது அல்லது பொருளாதார நிலை மற்றும் அவர்கள் வழங்கும் வாய்ப்புகள் என அனைத்தையும் மற்ற பெற்றோருடன் ஒப்பிடும்போது, அவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். இந்த ஒப்பீடுகள் பெற்றோரை தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைவாகச் செய்வதாக உணர வைக்கிறது. அவர்களின் தனித்தன்மையான முயற்சிகளுக்கும், சூழல்களுக்கும் அவர்களை பாராட்டாமல் விடுவதாக அவர்கள் உணர்கிறார்கள்.

(6 / 10)

நன்றி கூற மறப்பது - பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் தங்களின் வசதிக்கு ஏற்பவும், அதைவிட அதிகமாகவும் செய்யவே விரும்புகிறார்கள். இது பொருளாதார ரீதியிலான ஆதரவு, உணர்வு ரீதியிலான அக்கறை அல்லது அன்பை வெளிப்படுத்தும் எளிய காரியங்கள் என அவர்கள் செய்களில் வெளிப்படுகிறது.ஆனால் இவற்றுக்கெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு நன்றி கூறாமல், இருந்தால் அது குழந்தைகள் தங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள் என்ற உணர்வும், தங்களுக்கு சரியான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்ற உணர்வும் ஏற்படும். சாதாரண நன்றி என்ற ஒரு வார்த்தை அவர்களின் முயற்சிகளுக்கான பாராட்டை தெரிவிக்கும்.

(7 / 10)

நம்பிக்கை உடைவது - ஒரு வலுவான உறவுக்கு நம்பிக்கை என்பதுதான் அடித்தளமாக உள்ளது. குழந்தைகள் அந்த நம்பிக்கையை உடைக்கும்போது, அது பெற்றோரின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிடுகிறது. பொய்யுரைப்பது, அவர்களின் வாழ்வின் முக்கியமான விஷயங்களை மறைத்து வைப்பது என்பதெல்லாம், பெற்றோருக்கு தாங்கள் ஏமாற்றப்பட்ட உணர்வைத்தரும். எனவே பெற்றோர் – குழந்தை உறவின் ஆழம் குறித்து கேள்வி எழுப்பும். எனவே நம்பிக்கை உடையும்போதும் பெற்றோர் விரக்தியடைகிறார்கள்.

(8 / 10)

வேறுபாடு காட்டும்போது - குடும்ப நடவடிக்கைகள், பாரம்பரியங்கள், பெற்றோருடன் நேரம் செலவிடுவதில் ஆர்வம் காட்டாமல் போனால் பெற்றோருக்கு அது அதிக வலி நிறைந்ததாகிவிடும். குழந்தைகள் ஆர்வம் காட்டாதபோதும், தனித்துவிடப்பட்டபோதும், பெற்றோர் அவர்கள் வாழ்வில் முக்கியமில்லாதவர்களாக கருதப்படுகிறார்கள். உணர்வு ரீதியிலான இந்த விலகல், தனிமை, நிராகரிப்பு என அனைத்தையும் உணர்கிறார்கள்.

(9 / 10)

குடும்ப நிகழ்வுகளை தவிர்ப்பது - குடும்ப நிகழ்வுகளை தவிர்ப்பது, அல்லது வீட்டில் உள்ளவர்வர்களுக்கு உதவாதது, பொறுப்புக்களை தட்டிக்கழிப்பது என குழந்தைகளின் செய்யும்போது பெற்றோர் வருத்தப்படுகிறார்கள். இந்த செயல்கள் பெற்றோர்களை அவமதிக்கும் செயல்களாக உணர்கிறார்கள். வீட்டில் தங்குதடையின்றி பணிகள் நடைபெற அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவு இல்லாதது போல் பெற்றோர் உணர்கிறார்கள்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்