திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரம் திடீர் மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?
- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகன் கோயில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது.
- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகன் கோயில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது.
(1 / 6)
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
(2 / 6)
வழக்கமாக அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும் நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(3 / 6)
தமிழ் மாதமான மார்கழி வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
(4 / 6)
காலை 5.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் காலசந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும்.
(5 / 6)
பின்னர் மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணி முதல் 8.30க்குள் பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
மற்ற கேலரிக்கள்