ஐஸ்க்யூப் போதும்..துணிகளில் நீங்காமல் இருக்கும் பிடிவாதமான கறைகளை அகற்ற உதவும் எளிய டிப்ஸ்
- Cleaning hacks: தேநீர், காபி கறைகளை அகற்றப் பயன்படுத்தப்படும் அனைத்து இரசாயனங்களும் துணியை சேதப்படுத்தலாம். துணியில் படிந்திருக்கும் கடினமான கரைகளை போக்க சில எளிய வீட்டு முறை டிப்ஸ்களே போதுமானது
- Cleaning hacks: தேநீர், காபி கறைகளை அகற்றப் பயன்படுத்தப்படும் அனைத்து இரசாயனங்களும் துணியை சேதப்படுத்தலாம். துணியில் படிந்திருக்கும் கடினமான கரைகளை போக்க சில எளிய வீட்டு முறை டிப்ஸ்களே போதுமானது
(1 / 5)
நாம் அணிந்திருக்கும் ஆடைகளில் கரைகள் ஏற்படுவது சாதரணமான விஷயம் தான். குறிப்பாக காபி, டீ, குழம்பு போன்ற பிடிவாதமான கறையை அகற்றுவதற்கு சலவை இயந்திரம் மூலம் பலன் கிடைக்காது. கைகளால் அழுத்தி தேய்த்தாலு சில கறைகளை நீக்க முடியாது
(2 / 5)
கடினமான கரைகளை நீக்க சிலர் விலையுயர்ந்த சலவை பொடி, பொருள்களை பயன்படுத்துவதும் உண்டு. இதிலும் சில கறைகள் முழுமையாக நீங்காது
(3 / 5)
பிடிவாதமான கறைகளை அகற்ற ஐஸ் ஒரு சிறந்த வழியாகும். ஒரு தட்டையான மேற்பரப்பில் துணியை வைத்து, அதன் மீது ஐஸ் கட்டிகளை பல முறை தேய்க்கவும். அதன் பிறகு, பனி சிறியதாக மாறியதும், அதை சிறிது நேரம் கறை மீது வைத்திருக்க வேண்டும். அப்போது அந்த கறை மிகவும் இலகுவாக இருக்கும்
(4 / 5)
துணிகளை சுத்தம் செய்ய ஒரு நல்ல வழியாக டால்கம் பவுடர் உள்ளது. இது எண்ணெய் கறைகளில் நன்றாக வேலை செய்கிறது. ஒரு தட்டையான மேற்பரப்பில் துணியை வைத்து, பின் கறையை முழுவதுமாக மறைக்கும் விதமாக டால்கம் பவுடரைத் தூவி, தடிமனான பொடியை உருவாக்கவும். அந்த பொடியை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். இதன் விளைவாக, தூள் எண்ணெய் கறையை உறிஞ்சி, கறை மறைந்துவிடும். இப்போது துணியிலிருந்து பவுடர் நீக்கி மென்மையாக கசக்கி துவைக்கவும்
(5 / 5)
ப்ளீச்சை விட துணிகளில் வினிகர் பயன்படுத்துவது பாதுகாப்பானது. வியர்வை கறைகள், குறிப்பாக அக்குள்களில் ஏற்படும் மஞ்சள் கறைகளின் கறை மற்றும் நாற்றத்தை நீக்க வினிகரை பயன்படுத்தலாம்சிறிது வினிகரை 1/2 கப் தண்ணீரில் கலக்கவும். இந்த கலவையை கறைகளின் புள்ளிகள் மீது தடவவும். வினிகர் கறையை மிகவும் உறிஞ்சக்கூடியது. பின்னர் கறையைப் போக்க டிடர்ஜெண்டில் துணியைக் கழுவி எடுங்கள்
மற்ற கேலரிக்கள்