Director Cheran: 'ஆட்டோகிராப்ல விக்ரம் நடிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு காரணம் இதுதான்'-இயக்குநர் சேரன்
- ஆட்டோகிராப் படத்தில் நடித்து இயக்கியிருப்பார் சேரன். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. படம் 2004இல் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க இருந்ததாகவும் பின்னர் மறுத்ததாகவும் சேரன் யூ-டியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.

(1 / 6)
இயக்குநர் சேரன், டூரிங் டாக்கீஸ் என்ற யூ-டியூப் சேனலுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்று கொடுத்தார். அந்தப் பேட்டியை நடிகர் சித்ரா லட்சுமணன் எடுத்திருந்தார்.
(2 / 6)
அட்வான்ஸ் கொடுக்க ஒரு நாள் லேட் ஆனதால பிரபுதேவா ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்துட்டாரு என்று சேரன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
(3 / 6)
'அதுக்கு அப்பறம் நடிகர் விக்ரமிடம் ஆட்டோகிராப் கதையை கூறினேன். அவர் சேது படத்தில் இருந்தே என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். படம் பண்ணாலம்னு சொன்னார். அப்போ ஜெமினி படத்துல நடிக்க போனாரு. நானும் பாண்டவர் பூமி இயக்க போயிட்டேன்'
(4 / 6)
'ஜெமினி ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி கண்டது. அதுக்கு அப்றம் ஆட்டோகிராஃப் படம் வேண்டாம் என மறுத்துட்டாரு விக்ரம்'
(5 / 6)
'தங்கர்பச்சான் என்னிடம் கதையை கேட்டுட்டு இந்தக் கதை அழகி மாறி இருக்க என சொல்லிட்டு அழகி படம் எடுக்க போயிட்டாரு'
மற்ற கேலரிக்கள்