மழைக்கால நோய்த் தொற்றுக்களை விரட்ட இந்த பானங்கள் மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மழைக்கால நோய்த் தொற்றுக்களை விரட்ட இந்த பானங்கள் மட்டும் போதும்!

மழைக்கால நோய்த் தொற்றுக்களை விரட்ட இந்த பானங்கள் மட்டும் போதும்!

Nov 18, 2024 02:37 PM IST Priyadarshini R
Nov 18, 2024 02:37 PM , IST

  • மழைக்கால நோய்த் தொற்றுக்களை விரட்ட இந்த பானங்கள் மட்டும் போதும்.

ஆப்பிள் சைடர் வினிகர் - இந்த பானத்தை தயாரிக்க பட்டைப்பொடி, ஜாதிக்காய்ப்பொடி மற்றும் துருவிய ஆப்பிள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மிதமான சூட்டில் பருகவேண்டும். ,து உஙகள் உடலுக்கு தேவையான வைட்டமின்களை வழங்கி, உங்களுக்கு இதமான மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச்செய்யும் பானமாகும். குறிப்பாக இந்த குளுகுளு குளிர் காலத்துக்கு மிகவும் ஏற்றது.

(1 / 8)

கிவி ஸ்மூத்தி - கிவி பழம், யோகர்ட் இரண்டையும் கடையில் இருந்து வாங்கவேண்டும். அதை ஸ்மூத்தியாக தயாரித்து பருகவேண்டும். அதில் ஆரோக்கியமான அளவு வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் தரும் பானமாகும்.

(2 / 8)

இஞ்சி-மஞ்சள் தேநீர் - இஞ்சியை இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட்டு, அதில் மஞ்சள் தூள் கலந்து, வடிகட்டி பருகவேண்டும். தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து பருகலாம் அல்லது அப்படியேவும் பருகலாம். இது வீக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் சளித்தொற்றுகளை போக்குகிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.

(3 / 8)

கிரீன் ஸ்முத்தி - பாலக்கீர், வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்து இந்த கிரீன் ஸ்மூத்தி தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்துகிறது.

(4 / 8)

பீட்ரூட் – கேரட் சாறு - பீட்ரூட் மற்றும் கேரட் வைத்து தயாரிக்கப்படும் இந்த சாறு உங்களுக்கு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்களைக் கொடுக்கிறது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. குளிர் காலத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

(5 / 8)

மணத்தக்காளிப்பழத் தேநீர் - மணத்தக்காளிப்பழத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் நிறைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை காயவைத்து, சூடான தண்ணீரில் கலந்து பருகவேண்டும். இது சளியின் தீவிரத்தை குறைக்கும் என்று கூறுப்படுகிறது.

(6 / 8)

எலுமிச்சை மற்றும் இஞ்சி டீ - இது உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் மட்டுமல்ல நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கச் செய்யும் பானமாகும். இஞ்சியைத் துருவி கொஞ்சம் தண்ணீரில் கொதிக்கவிட்டு, எலுமிச்சை பழச்சாறு கலந்து இறக்கவேண்டும். இதில் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது பனிக்காலத்தில் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகிறது.லாவண்டர் மற்றும் சேமோமைல் டீ - சாமந்தி மற்றும் லாவண்டர் பூக்களை சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இது உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது உங்களுக்கு குளிர் காலத்தில் மிகவும் ஏற்றது. 

(7 / 8)

எலுமிச்சை மற்றும் தேன் - கொதிக்க வைத்த தண்ணீரில், வைட்டமின் சி சத்து நிறைந்த மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணம் கொண்ட, எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் தலா இரண்டு ஸ்பூன்கள் கலந்து பருகவேண்டும். இது தொண்டை ஆரோக்கியத்தைக் அதிகரிக்கும். அதற்கு தேன் உதவும். நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும்.மாதுளை கிரீன் டீ - ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த கிரீன் டீயுன் மாதுளை பழத்தின் சாற்றை கலந்து ஒரு புத்துணர்வு தரும் பானம் உருவாக்கப்படுகிறது. இது சுவையானது மட்டுமின்றி, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளிட்ட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்