சனி கொட்டுவதை சுக்கிரன் கொடுக்கப் போகிறார்..இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது-these are the zodiac sign people who are lucky due to saturn venus combination - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கொட்டுவதை சுக்கிரன் கொடுக்கப் போகிறார்..இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

சனி கொட்டுவதை சுக்கிரன் கொடுக்கப் போகிறார்..இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Jan 03, 2024 05:32 PM IST Suriyakumar Jayabalan
Jan 03, 2024 05:32 PM , IST

  • Saturn Venus: சனி சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்ட யோகத்தைப் பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் கடினமான உழைப்புக்கு எப்போதுமே நற்பலன்களை கொடுப்பார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை வழங்கக்கூடிய இவர், இரட்டிப்பாக பலன்களை திருப்பிக் கொடுப்பார். 

(1 / 7)

அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். 

(2 / 7)

சுக்கிர பகவான் ஆடம்பர வாழ்க்கைக்கு காரணியாக விளங்கி வருகிறார் அழகு ஆடம்பரம் செல்வம் செழிப்பு உள்ளிட்டவைகளின் தலைவனாக விளங்கும் சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றி விடுகிறார்.  

(3 / 7)

2023 ஆம் ஆண்டின் இறுதியில் சனி மற்றும் சுக்கிரன் இணைந்து  கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும், இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 7)

தனுசு ராசி: சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 7)

ரிஷப ராசி: சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் பாராட்டுகள் அதிகரிக்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

(6 / 7)

மீன ராசி: சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு யோகத்தின் பலன்களை முழுமையாக கொடுக்க போகின்றனர். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்