சனி நாற்காலி.. 3 ராசிகளுக்கு யோக வாழ்க்கை-these are the people of the zodiac who are going to get heavenly life due to lord saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி நாற்காலி.. 3 ராசிகளுக்கு யோக வாழ்க்கை

சனி நாற்காலி.. 3 ராசிகளுக்கு யோக வாழ்க்கை

Jan 20, 2024 07:30 AM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 07:30 AM , IST

  • Saturn Transit: சனிபகவானால் சொர்க்க வாழ்க்கையை பெற போகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.  

(2 / 6)

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த புத்தாண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் சனிபகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் முக்கிய விளைவுகளை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்துக் கொடுப்பார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சனி பகவானால் யோகங்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

(5 / 6)

கடக ராசி: இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும் சனி பகவானின் அனுகிரகம் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கின்றது இந்த காலகட்டத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் உங்களுக்கு சுமூகமாக முடிவடையும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடைய வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்