Marriage Yogam: உருவான கேதார ராஜயோகம்.. திருமணம், வீடு வாங்கும் யோகம் பெறப்போகும் ராசிகள்
- ஏழு கிரகங்கள் நான்கு ராசிகளில் சஞ்சரிக்கும்போது கேதார ராஜயோகம் உருவாகும். இந்த கேதார ராஜயோகம் மிகவும் அரிதான யோகமாகும்
- ஏழு கிரகங்கள் நான்கு ராசிகளில் சஞ்சரிக்கும்போது கேதார ராஜயோகம் உருவாகும். இந்த கேதார ராஜயோகம் மிகவும் அரிதான யோகமாகும்
(1 / 6)
ஏனென்றால் இக்காலகட்டத்தில் அதிர்ஷ்டமான இடத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன் இருக்கும். அதோடு சூரியனும், சனி பகவானும் சிறந்த ஸ்தானத்தில் உள்ளன. தற்போது வந்துள்ளதுகூட, 500 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
(2 / 6)
மேஷம்: தற்போது உருவாகியுள்ள கேதார ராஜயோகத்தால் மேஷ ராசியினருக்கு இத்தனை நாட்களாக இருந்த தடங்கல்கள் நீங்கும். வெகுநாட்களாக வீடு கட்ட நினைத்தவர்களுக்கு அதைக் கட்டும் யோகம் வாய்க்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தால் வாய்ப்புகள் கிடைக்கும்.
(3 / 6)
மிதுனம்: இந்த ராசியினருக்கு உருவாகியுள்ள கேதார ராஜயோகத்தால் தொழில் செய்பவர்களுக்கு நற்பலன் கிடைக்கும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும். காதலிப்பவர்கள், இந்த காலகட்டத்தில் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவது எளிது.
(4 / 6)
துலாம்: இந்த ராசியினருக்கு உருவாகியுள்ள கேதார ராஜயோகத்தால் ஸ்போர்ட்ஸ் மற்றும் சினிமாவில் இயக்குநர்களாக முயற்சிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பதவியின்றி இருக்கும் கட்சித்தொண்டர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். மேடை வரை வந்து திருமணம் தட்டிப்போனவர்களுக்குக்கூட, திருமணம் கைகூடும். குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது. நினைவுத்திறன் அதிகரிப்பதால், மாணவர்கள் நன்கு படிப்பர்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்