வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ்.. வித்தியாச ஸ்டெப்கள்..இன்ச் பை இன்ச் ஆக மிரட்டிவிட்ட ராஷ்மிகா- அல்லு அர்ஜூன்.. படங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ்.. வித்தியாச ஸ்டெப்கள்..இன்ச் பை இன்ச் ஆக மிரட்டிவிட்ட ராஷ்மிகா- அல்லு அர்ஜூன்.. படங்கள்

வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ்.. வித்தியாச ஸ்டெப்கள்..இன்ச் பை இன்ச் ஆக மிரட்டிவிட்ட ராஷ்மிகா- அல்லு அர்ஜூன்.. படங்கள்

Dec 01, 2024 09:54 PM IST Marimuthu M
Dec 01, 2024 09:54 PM , IST

  • புஷ்பா 2 திரைப்படத்தின் வந்துச்சே பீலிங்ஸ் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலில் ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் குத்தாட்டம் போட்டிருக்கிறார், அல்லு அர்ஜூன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், புஷ்பா: தி ரைஸ் (2021) பல இதயங்களை வென்றதற்கு ஒரு முக்கியக் காரணம், படத்தில் புஷ்பராஜூவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.

(1 / 6)

இப்படம் இந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு பின், ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(2 / 6)

இந்நிலையில் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்தநாளில் ஒரு சிறப்பு டீஸரை வெளியிட்டனர். அதில் அல்லு அர்ஜூன் ’ஜதாரா’ என்னும் தெலுங்கு பழங்குடியினர் கெட்டப்பில் காணப்பட்டார். அதேபோல், ’புஷ்பா புஷ்பா புஷ்பராஜ்’ என்னும் முதல் சிங்கிள் பாடலும் வெளியானது. அதனைத்தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலும் வெளியாகியானது. அப்பாடலை தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். ’’சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி.. பார்க்கத்தான் பாறை.. உள்ளேயே வேற..’’என அனைத்து மக்களுக்கும் புரியும்படி எளிய தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். இப்பாடல்கள் இரண்டும் சமூகவலைதளங்களில் ஹிட்டாகின. 

(3 / 6)

அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலாவுடன், ’சப்புன்னு அறைவேன்டா’ என்னும் பாடலில் அல்லு அர்ஜூன் ஆடிய பாடல் வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் டிசம்பர் ஒன்றாம் தேதி மாலையில், வந்துச்சே பீலிங்ஸ்.. வந்துச்சே பீலிங்ஸ்.. வண்டிய வண்டியா வந்துச்சு பீலிங்ஸ் என்னும் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் பாடலையும் தேவிஸ்ரீபிரசாத்தின் ஆஸ்தான கவிஞரான விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலும் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜூனின் நடன அசைவுகளால் வெகு சீக்கிரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

(4 / 6)

இந்நிலையில் மூன்று வருட காத்திருப்புக்குப் பின், வரும் டிசம்பர் 5ஆம் தேதி ‘ புஷ்பா: தி ரூல்’, அதாவது புஷ்பா 2ஆவது பாகத் திரைப்படம் வெளியாவதால், அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

(5 / 6)

இதுதொடர்பாகப் பேசிய புஷ்பா 2 படத் தயாரிப்பாளர், ’’தமிழ்நாட்டில் விஜய் சார், அஜித்குமார் சார் & ரஜினிகாந்த் சார் தவிர, மற்ற எந்த நட்சத்திரங்களும் முதல் நாள் இரட்டை இலக்க பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தொடவில்லை. புஷ்பா 2க்கு முதல் நாளிலேயே இரட்டை இலக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தி கோட் திரைப்படத்திற்கு 806 திரையரங்குகளில் படம் ரிலீஸானதுபோல், இப்படத்திற்கும் ரிலீஸாகும்’ எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷனாக அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பீலீங்ஸ் மற்றும் சூடான தீ கங்கு மாதிரி ஆகிய இரண்டு பாடல்களை சொல்லலாம். குறிப்பாக அல்லுஅர்ஜூன் மற்றும் ராஷ்மிகா பீலிங்ஸ் பாடலில் அதிரடியாக ஆடி கவர்கின்றனர். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்