மெய் சிலிர்க்க வைத்த விமான சாகசங்கள்..மெரினாவை திணறடித்த மக்கள் கூட்டம் - சிறப்பு புகைப்பட தொகுப்பு!
- 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான சாகச நிகழ்ச்சி இன்று (அக்.6) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
- 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான சாகச நிகழ்ச்சி இன்று (அக்.6) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
(1 / 7)
மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. (AFP)
(2 / 7)
விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.(AFP)
(3 / 7)
இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், விமானப் படைத் தலைமைத் தளபதி மார்ஷல் ஏ.பி.சிங், விமான பயிற்சிப் படைப்பிரிவு தளபதி மார்ஷல் நாகேஷ் கபூர், உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.(AFP)
(4 / 7)
விமானப் படையின் ரஃபேல், மிக் -29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய் சாராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட்டன.(AFP)
(5 / 7)
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை நேரில் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டிருந்ததால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.(AFP)
(6 / 7)
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்ததன் மூலம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.(AFP)
மற்ற கேலரிக்கள்