Tharshan: ஆமா நான் காதலிக்கிறேன்.. இரண்டாவது முறையாக காதலில் விழுந்த தர்ஷன்
நடிகர் தர்ஷன் தனது காதல் தொடர்பாக முதல் முறையாக பேட்டி அளித்தார்.
(1 / 6)
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்ஷன், மாடலிங்க் துறையில் இருந்தார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் வேலையைவிட்டு சென்னைக்கு வந்தார். பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். ஒரு சில பெரிய விளம்பரங்களிலும் நடித்தார்.
(2 / 6)
இவர் பிக் பாஸ் 3 ஆவது சீசனிக் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது நேர்மையான குணம் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் தர்ஷன். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த தர்ஷன் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பட்டார். அதே மேடையில் தன் தயாரிப்பு நிறுவனமாக ராஜ் கமல் பிலிமிஸ் நிறுவனத்தில் தர்ஷன் ஒரு படம் நடிப்பார் என கமல் ஹாசன் அறிவித்தார்.
(3 / 6)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷன் நடித்து இருந்தார். இதையடுத்து ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார் தர்ஷன்.
(4 / 6)
இவர் தற்போது நாடு என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலைவாழ் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், அடிப்படைத் தேவைகளை பெற எவ்வாறுசிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை படத்தின் கதை.
(5 / 6)
சமீபத்தில் அளித்த பேட்டியில் தர்ஷன், “ காதல் வாழ்க்கை ரொம்ப கேவளமாக சென்று கொண்டு இருக்கீறது. எனக்கு ஒரு பெண் மேல க்ரஷ் இருக்கு. ஆனா அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரை பிடித்து இருக்கலாம். எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் க்ரஷ் இருக்கிறது. அது இப்போது சொல்ல முடியாது. படங்கள் வருகிறது அதனால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன் “ என்றார்.
மற்ற கேலரிக்கள்