India vs Canada: கிரிக்கெட் இல்லனா பரவாயில்ல.. ஃபுட்பால் இருக்கே! ஜாலியாக பொழுதை கழித்த இந்தியா - கனடா வீரர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  India Vs Canada: கிரிக்கெட் இல்லனா பரவாயில்ல.. ஃபுட்பால் இருக்கே! ஜாலியாக பொழுதை கழித்த இந்தியா - கனடா வீரர்கள்

India vs Canada: கிரிக்கெட் இல்லனா பரவாயில்ல.. ஃபுட்பால் இருக்கே! ஜாலியாக பொழுதை கழித்த இந்தியா - கனடா வீரர்கள்

Jun 15, 2024 11:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 15, 2024 11:55 PM , IST

  • தொடர் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருந்த நிலையில் போட்டி நடத்த முடியாத காரணத்தால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்தானது

இந்த போட்டி ரத்து காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. குரூப் ஏ பிரிவில் இந்தியா 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கனடா அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது

(1 / 7)

இந்த போட்டி ரத்து காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. குரூப் ஏ பிரிவில் இந்தியா 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கனடா அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாஸ் போட வேண்டும். ஆனால் மைதானத்தில் அவுட் பீல்ட் பகுதி ஈரமாக இருந்த காரணத்தால் அம்பயர்கள் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் சீரான இடைவெளி விட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்

(2 / 7)

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாஸ் போட வேண்டும். ஆனால் மைதானத்தில் அவுட் பீல்ட் பகுதி ஈரமாக இருந்த காரணத்தால் அம்பயர்கள் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் சீரான இடைவெளி விட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்(PTI)

டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மைதானத்தில் வைத்து இந்திய வீரர்கள் கால்பந்து விளையாடி டைம்பாஸ் செய்தனர். கேப்டன் ரோகித் ஷர்மா உள்பட அனைத்து வீரர்களும் கால்பந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட் இல்லனா பரவாயில்லா, கால்பந்து போதும என்கிற ரீதியில் விளையாடியுள்ளனர் 

(3 / 7)

டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மைதானத்தில் வைத்து இந்திய வீரர்கள் கால்பந்து விளையாடி டைம்பாஸ் செய்தனர். கேப்டன் ரோகித் ஷர்மா உள்பட அனைத்து வீரர்களும் கால்பந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட் இல்லனா பரவாயில்லா, கால்பந்து போதும என்கிற ரீதியில் விளையாடியுள்ளனர் (PTI)

மழை குறுக்கீடுக்கும் நடுவே ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண மைதானத்துக்கு வருகை தந்தனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் சென்று ஆட்டோகிராப் போட்டு கொடுத்ததுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்

(4 / 7)

மழை குறுக்கீடுக்கும் நடுவே ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண மைதானத்துக்கு வருகை தந்தனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் சென்று ஆட்டோகிராப் போட்டு கொடுத்ததுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்(AP)

கனடா வீரர்களுடன் அரட்டையடித்தும், தங்களது அனுபங்களை பகிர்ந்தும் இந்திய வீரர்கள் நேரத்தை செலவழித்தனர். கனடா அணியிலும் சில வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்

(5 / 7)

கனடா வீரர்களுடன் அரட்டையடித்தும், தங்களது அனுபங்களை பகிர்ந்தும் இந்திய வீரர்கள் நேரத்தை செலவழித்தனர். கனடா அணியிலும் சில வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்(PTI)

களத்தில் இருக்கும் போது ஆக்ரோஷத்தின் உச்சத்தில் இருக்கும் விராட் கோலி, அதற்கு நேர் எதிராக களத்தை விட்டு வெளியே நடந்து கொள்வது பலரும் அறிந்த விஷயமே. அப்படிதான் கோலி போட்டி ரத்தான பிறகும் கனடா வீரர்களுடன் குறும்புத்தனமான விளையாட்டில் ஈடுபட்டு நேரத்தை செலவிட்டார்

(6 / 7)

களத்தில் இருக்கும் போது ஆக்ரோஷத்தின் உச்சத்தில் இருக்கும் விராட் கோலி, அதற்கு நேர் எதிராக களத்தை விட்டு வெளியே நடந்து கொள்வது பலரும் அறிந்த விஷயமே. அப்படிதான் கோலி போட்டி ரத்தான பிறகும் கனடா வீரர்களுடன் குறும்புத்தனமான விளையாட்டில் ஈடுபட்டு நேரத்தை செலவிட்டார்(ANI)

லீக் சுற்று போட்டி முடிவடைந்துவிட்ட நிலையில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 20ஆம் தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது

(7 / 7)

லீக் சுற்று போட்டி முடிவடைந்துவிட்ட நிலையில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 20ஆம் தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது(ANI)

மற்ற கேலரிக்கள்