டேஸ்ட்டி ப்ளஸ் ஹெல்த்தி..மக்கானா வைத்து தயார் செய்யக்கூடிய 5 சுவை மிக்க சிம்பிள் உணவுகள்
- உடலுக்கு ஆரோக்கியம் தரும் தாமரை விதையை வைத்து பல சிம்பிளான டிஷ்களை தயார் செய்யலாம். மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதையில் வைத்து தயார் செய்யக்கூடிய 5 சூப்பரான உணவுகளை பார்க்கலாம்
- உடலுக்கு ஆரோக்கியம் தரும் தாமரை விதையை வைத்து பல சிம்பிளான டிஷ்களை தயார் செய்யலாம். மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதையில் வைத்து தயார் செய்யக்கூடிய 5 சூப்பரான உணவுகளை பார்க்கலாம்
(1 / 7)
தாமரை விதை இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை பல்வேறு நன்மைகளை தருவதாக உள்ளது. இதில் கால்சியம், கார்போஹைட்ரேட்டுகளுடன், வைட்டமின் ஏ, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் இதில் நிரம்பியுள்ளன(shutterstocl)
(2 / 7)
மக்கானாவை பச்சையாகவோ அல்லது பொரித்தோ உண்ணலாம். ஆனால் நீங்கள் அதை இன்னும் சுவையாக சாப்பிட விரும்பினால், மேலும் சில உணவுகளை தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்(shutterstock)
(3 / 7)
மக்கானா கீர் என்று அழைக்கப்படும் மக்கானா பாயாசம் நோன்பு காலத்தில் மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. இருப்பினும், நீங்கள் விரும்பினால், சர்க்கரை இல்லாமல் மக்கானா கீரை உலர் பழங்கள் மற்றும் பருப்புகளுடன் கலந்து சாப்பிடலாம்(shutterstock)
(4 / 7)
நீங்கள் டயட்டில் இருந்தால் மாலை சிற்றுண்டியாக மக்கானா சாட் சாப்பிடலாம். இது ஆரோக்கியமான மற்றும் ஜீரோ கலோரி சிற்றுண்டியாக இருக்கும். எடைகுறைப்புக்காக உண்ணாவிரதம் இருப்பவர்கள் இதை சாப்பிடலாம்(shuttrstock)
(5 / 7)
தயிருடன் கலந்து தயார் மக்கானாவை ரைத்தாவாக தயார் செய்யலாம். ஆரோக்கியமான உணவுக்கு சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்(shutterstock)
(6 / 7)
நோன்பின் போது ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு சாப்பிட விரும்புவோர் மக்கானா நம்கீன் தயார் செய்யலாம். முந்திரி, பாதாம், திராட்சை, பருப்பு போன்றவற்றை நன்கு வறுத்து அதனுடன் வறுத்த மக்கானாவைச் சேர்க்கவும். உப்பு மற்றும் விருப்பமான மசாலா சேர்த்து தயார் செய்து சுவைக்கலாம்(shutterstock)
மற்ற கேலரிக்கள்