TN 12th Result 2024: மாணவ, மாணவிகளே ரெடியா இருங்க .. தமிழகத்தில் நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tn 12th Result 2024: மாணவ, மாணவிகளே ரெடியா இருங்க .. தமிழகத்தில் நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!

TN 12th Result 2024: மாணவ, மாணவிகளே ரெடியா இருங்க .. தமிழகத்தில் நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!

May 05, 2024 12:22 PM IST Karthikeyan S
May 05, 2024 12:22 PM , IST

  • பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 6) வெளியாகிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் 1-ல் தொடங்கி 13 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

(1 / 5)

தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 6) வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன.

(2 / 5)

நாளை (திங்கட்கிழமை) காலை தேர்வு முடிவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வெளியிடுகிறாரா? அல்லது அரசு தேர்வுத் துறையே வெளியிடுகிறதா? என்பது தொடர்பான விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

(3 / 5)

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

(4 / 5)

இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்